டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடந்தது? .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை

ஹைதராபாத்தில் நடந்த என்கவுண்டர் குறித்து விளக்கமளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெலுங்கானா அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஹைதராபாத்தில் நடந்த என்கவுண்டர் குறித்து விளக்கமளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெலுங்கானா அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அருகே கால்நடை மருத்துவ பெண்மணி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். இந்த கொலை நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிக மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டார்.

அந்த மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் இன்று அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

அதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது? அதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது?

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த என்கவுண்டர் குறித்து விளக்கமளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெலுங்கானா அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 4 பேரும் கொல்லப்பட்டது. என்ன நடந்தது என்று விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெண் வன்புணர்வு

பெண் வன்புணர்வு

அதேபோல் ஹைதராபாத் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்தும் விளக்கம் அளிக்கும்படி இதில் கூறப்பட்டு இருக்கிறது. அந்த பெண்ணுக்கு எதிரான வழக்கில் எவ்வளவு விசாரணை இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

எப்படி நடந்தது?

எப்படி நடந்தது?

மேலும் இந்த வழக்கில் 4 பேரும் எப்படி குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர். வாக்குமூலம் தவிர வேறு என்ன ஆதாரங்கள் இருக்கிறது. என்ன மாதிரியான மருத்துவ ஆதாரங்கள் இருக்கிறது என்றும் இதில் மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியது.

என்ன சந்தேகம்

என்ன சந்தேகம்

அதே சமயம் இன்னொரு பக்கம் போலீஸ் என்கவுண்டர் குறித்து நிறைய சர்ச்சைகள் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அதிகாலை 3.30 மணிக்கு போலீசார் குற்றவாளிகளை கொண்டு சென்றது ஏன்? ஏன் கையில் விலங்கு இல்லாமல் போலீசார் அவர்களை அழைத்து சென்றனர் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

English summary
Hyderabad Doctor Murder case: Home Ministry asks for Report on the encounter as soon as possible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X