டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைதராபாத் என்கவுண்டர்.. தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு.. உண்மை கண்டறியும் குழு விரைகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐதராபாத் என்கவுண்டர் சரியான தீர்வா ?

    டெல்லி: பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, காவல்துறையினரால் 4 பேர், என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

    Hyderabad encounter case: National Human Rights Commission files suo motu

    இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் மொத்தம் நான்கு பேரை குற்றவாளிகள் என கூறி கைது செய்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை, சுமார் 3.30 மணி அளவில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்து, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப் பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்திற்காக, போலீசாருக்கு பாராட்டுகளும், விமர்சனங்களும் கலவையாக கிடைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மீடியா செய்திகள் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது. மேலும் உண்மை கண்டறியும் குழுவை என்கவுண்டர் நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்க மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதனிடையே ஹைதராபாத் என்கவுண்டர் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். பலாத்கார குற்றவாளிகளுக்கு கருணை காட்டத் தேவையில்லை. இதுபோன்ற பலாத்கார சம்பவங்கள் மொத்த நாட்டையும் உலுக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    National Human Rights Commission has taken suo motu cognizance of media reports that the 4 accused, arrested by the police in connection with the rape and murder of veterinarian doctor in Telangana.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X