டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் எப்போது காஷ்மீர் வர வேண்டும்.. கவர்னருக்கு மீண்டும் ராகுல் காந்தி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: உங்கள் அழைப்பை ஏற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நான் வர தயாராக இருக்கிறேன். நீங்க எப்ப வரவேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் என அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகை வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்ப்பட்ட பிறகு அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைப்பேசி சேவை, இணைய சேவை உள்பட தகவல் தொழில்நுட்ப சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

I accept your invitation to visit Jammu & Kashmir, When can I come?, asked Rahul gandhi to governor malik

இதனால் ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அறிய அங்கு செல்ல முயன்ற அரசியல் கட்சி தலைவர்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை நிகழ்ந்து வருவதாக கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், "பொறுப்பு மிக்க காங்கிரஸ் தலைவரான ராகுல காந்தி இப்படி பேசக்கூடாது , அவர் வேண்டுமானால் தாராளமாக ஜம்மு காஷ்மீர் வந்து நிலைமையை தெரிந்து கொள்ளலாம். காஷ்மீரை சுற்றி பார்க்க ராகுலுக்கு விமானம் அனுப்பி வைக்கிறோம் என மாலிக் கூறியருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்த ராகுல் காந்தி, ஆளுநர் மாலிக் அவர்கேள, உங்கள் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவும் நானும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு வருகை தர உள்ளோம். ஆனால் எங்களுக்கு நீங்கள் அனுப்பும் விமானம் வேண்டாம். அங்குள்ள மக்கள், தலைவர்கள் மற்றும் நமது ராணுவ வீரர்களை சுதந்திரமாக சந்தித்து பேச மட்டும் அனுமதி வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆளுநர் மாலிக் அவர்களே, எனது டுவிட் பதிவிற்கு நீங்கள் அளித்த பதிலை பார்த்தேன். நான் ஜம்மு காஷ்மீருக்கு வரலாம் என்ற என்ற உங்கள் அழைப்பை ஏற்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்களை சந்திக்கிறேன். எப்போது வர வேண்டும் என்று சொல்லுங்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
Rahul Gandhi on twitter: Dear Maalik ji, I saw your feeble reply to my tweet. I accept your invitation to visit Jammu & Kashmir and meet the people, with no conditions attached. When can I come?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X