டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் பாதுகாவலனாக முடியாது.. ஏனென்றால் நான் பிராமணன்.. சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் பாதுகாவலனாக முடியாது.. ஏனென்றால் நான் பிராமணன்.. சுப்பிரமணியன் சுவாமி

    டெல்லி: நான் பாதுகாவலனாக முடியாது, ஏனென்றால் நான் பிராமணன் என சுப்பிபமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டின் பாதுகாவலர்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் நானும் பாதுகாவலன்தான் என்ற ஒரு பிரசாரத்தை பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் டுவிட்டரில் சவுக்கிதார் (பாதுகாவலன்) நரேந்திர மோடி என பெயரை மாற்றியுள்ளார். இவரை போலவே அமித்ஷா, அருண்ஜேட்லி, பியூஷ் கோயல் , தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் தனது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றியுள்ளனர்.

    2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா! 2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா!

    கேள்வி

    கேள்வி

    இந்த நிலையில் தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சவுக்கிதார் என்ற பெயர் மாற்றத்தை கட்சியினர் செய்து வர நீங்கள் மட்டும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.

    பாதுகாவலர்கள்

    பாதுகாவலர்கள்

    அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் அளிக்கையில் நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் பாதுகாவலன் ஆக முடியாது. பிராமணர்கள் பாதுகாவலர்களாக முடியாது.

    சவுக்கிதார்

    சவுக்கிதார்

    இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே பாதுகாவலர்களின் பணியாகும். இதைதான் சவுக்கிதார்களிடம் எல்லாரும் எதிர்பார்க்கின்றனர்.

    சர்ச்சை

    சர்ச்சை

    அதனால் நான் சவுக்கிதாராக முடியாது என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் சர்ச்சைக்குரிய வகையிலேயே சுப்பிரமணியன் சுவாமி பேசுவது வழக்கம். ஆனால் தற்போது அவர் சார்ந்த கட்சியை ஜாதியை கொண்டு பிரித்து பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அதுவும் நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே பாதுகாவலர்களின் பணியாகும் என்று கூறியதன் மூலம் சவுக்கிதார்கள் என்றால் பணியாளர்கள் என்ற அளவுக்கு பேசியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

    English summary
    BJP Senior leader Subramanian Swamy says that he did not change his name to Chowkidar Subramanian Swamy on Twitter because he is a Brahmin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X