டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேளாண் மசோதா... திடீர் பல்டி அடித்த ஹர்சிம்ரத் பாதல்...விவசாயிகள் மீது பழி!!

Google Oneindia Tamil News

டெல்லி: வேளாண் மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று நான் கூறவில்லை. விவசாயிகள்தான் அவ்வாறு கூறினார்கள் என்று இந்த மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் பாதல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இவர் இந்தியா டுடே சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், ''மூன்று வேளாண் மசோதாக்களையும் விவசாயிகளுக்கு எதிரானது என்று நான் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். விவசாயிகள்தான் அவ்வாறு கூறி இருந்தனர்.

சோனமுத்தா போச்சா... வேளாண் மசோதா விவகாரம்.. கவிழ்கிறதா ஹரியானா பாஜக அரசு? துஷ்யந்த் கட்சி போர்க்கொடிசோனமுத்தா போச்சா... வேளாண் மசோதா விவகாரம்.. கவிழ்கிறதா ஹரியானா பாஜக அரசு? துஷ்யந்த் கட்சி போர்க்கொடி

நம்பிக்கை

நம்பிக்கை

நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பது முக்கியம் இல்லை. அதில் விவசாயிகளுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்களுக்கு பயன் அளிக்க வேண்டும்.

கவுரவம்

கவுரவம்

வேளாண் அவசர சட்டத்திற்கு எதிராக நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். விவசாயிகள் மற்றும் அவர்களது மகளாக அவர்களுக்கு துணை நிற்பதை கவுரவமாக கருதுகிறேன். இறுதி வரை போராட வேண்டும் என்பதற்காகத் தான் துவக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வந்தபோது நான் ராஜினாமா செய்யவில்லை. இறுதி வரை போராடி மாற்றம் கொண்டு வரமுடியும் என்று நம்பி இருந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் இறப்பு

விவசாயிகள் இறப்பு

இதுகுறித்து இவரது கணவரும் அகாலிதளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், ''மூன்று வேளாண் மசோதாக்களையும் கடுமையாக எதிர்க்கிறேன். 20 லட்சம் விவசாயிகள். மூன்று லட்சம் மண்டி தொழிலாளர்கள், 30 லட்சம் பருப்பு தானிய உற்பத்தியாளர்கள் ஆகியோரை இறக்கட்டும் என்று இந்த மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக இருக்கும் கொள்முதல் முறையையும் அழிப்பதற்காக இந்த மசோதாக்களை கொண்டு வந்துள்ளனர்'' என்றார்.

கூட்டணி விரிசல்

கூட்டணி விரிசல்

பாஜகவுடன் நீண்ட கூட்டணி வைத்து இருக்கும் அகாலிதளம் கட்சி சார்பில் மோடி அரசில் கடந்த 2014ல் இருந்து ஒரே உறுப்பினராக ஹர்சிம்ரத் கவுர் பாதல் இருந்து வருகிறார். தற்போது இந்த மசோதாவால் பஞ்சாபில் கட்சியின் செல்வாக்கை உயர்த்திப் பிடிக்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

English summary
i am not calling farm bills anti-farmer, it’s the farmers says Harsimrat Badal on Agri Bill
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X