டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    ரயில் படிக்கட்டில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவலர் -CCTV

    டெல்லி: நிர்பயா கொலையாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை வாரண்ட் காரணமாக பெரிய மகிழ்ச்சி இல்லை என அவரின் தாயார் ஆஷா தேவி கூறியுள்ளார்.

    மார்ச் 3ம் தேதி, காலை 6 மணிக்கு, நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் இன்று வாரண்ட் பிறப்பித்தது.

    I am not very happy as this is the third time that death warrant has been issued: Asha devi

    முதலில் ஜனவரி 22ம் தேதியும், பிறகு பிப்ரவரி 1ம் தேதியும் என இருமுறை, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டு, சட்டப் போராட்டத்தை காரணம் காட்டி அவை தள்ளிப்போயுள்ளன. இம்முறை மூன்றாவது முறையாக நான்கு குற்றவாளிகளுக்கும், மரண தண்டனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்! நிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்!

    நிர்பயா தாய், ஆஷா தேவி நீதிமன்ற வளாகத்தில் இன்று பேசுகையில் கூறியதாவது: மரண தண்டனை வாரண்ட் பிறப்பிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும் என்பதால், எனக்கு இதில் பெரிய மகிழ்ச்சி எதுவும் தெரியவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இறுதியாக அவர்களுக்கு மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதில் திருப்தி அடைகிறேன். குற்றவாளிகள் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    I am not very happy as this is the third time that death warrant has been issued: Asha devi

    குற்றவாளிகளில் மூன்று பேர், சட்டப் போராட்டம் அனைத்திலும் தோற்றுவிட்டனர். எனவே, இனியும் தாமதிக்க கூடாது என திகார் சிறை நிர்வாகம் சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதை, ஏற்றுக் கொண்டு, நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    English summary
    Asha Devi, Mother of 2012 Delhi gang-rape victim: I am not very happy as this is the third time that death warrant has been issued. We have struggled so much, so I am satisfied that death warrant has been issued finally. I hope they (convicts) will be executed on 3rd March.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X