டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போர்க்களமான ஜேஎன்யூ வளாகம்.. விரைந்த ஆம்புலன்ஸ்கள்.. போலீஸ் குவிப்பு.. கெஜ்ரிவால் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பயங்கர வன்முறை சம்பவம் தொடர்பாக, மாணவர் யூனியன் அமைப்பும், ஏபிவிபி அமைப்பும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டல் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தி வந்த இடதுசாரி மாணவர்கள் மீது முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த ஒரு கும்பல் இன்று சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளது.

    I am so shocked to know about the violence at JNU: Arvind Kejriwal

    இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைக்கப்பட்டுள்ளது.


    அதேநேரம் ஏபிவிபி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், பல்கலைகழகத்தில் இடதுசாரிகள் மாணவர் அமைப்பினர் எங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். சுமார் 25 மாணவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டி உள்ளது.

    மற்றொரு பக்கம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த தாக்குதலின் பின்னணியில் ஏபிவிபி இருப்பதாக கூறியுள்ளது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவங்களை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சி அடைகிறேன். மாணவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை உடனடியாக வன்முறைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும். ஒரு பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், இந்த நாடு எப்படி வளரும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதனிடையே சம்பவம் குறித்து அறிந்ததும் கூடுதலாக போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    முகமூடி அணிந்து நுழைந்த கும்பல்.. சரமாரி தாக்குதல்.. ஆயிஷ் கோஷ் மண்டை உடைப்பு.. பதற்றத்தில் ஜேஎன்யூமுகமூடி அணிந்து நுழைந்த கும்பல்.. சரமாரி தாக்குதல்.. ஆயிஷ் கோஷ் மண்டை உடைப்பு.. பதற்றத்தில் ஜேஎன்யூ

    10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருப்பதாக டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவத்தால் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் போர்க்களமாக காட்சியளிக்கிறது.

    English summary
    Chief Minister of Delhi, Arvind Kejriwal: I am so shocked to know about the violence at JNU. Students attacked brutally. Police should immediately stop violence and restore peace. How will the country progress if our students will not be safe inside university campus?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X