டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் இந்தியாவின் மகன்... தலாய் லாமா தடாலடி

Google Oneindia Tamil News

டெல்லி: நான் இந்தியாவின் மகன் என்று புத்த மத துறவியும், திபெத்திய ஆன்மீக தலைவருமான தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவின் மிரட்டலுக்கு அடிபணியாமல், அந்த நாட்டை எதிர்த்து அமைதி வழியில் போராடி வருபவர் தலாய் லாமா, இந்தநிலையில், சீனா மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தான் இந்தியாவின் மகன் என்றார்.

I am a son of India, says Dalai Lama

எனது சிந்தனைகள் அனைத்தும் உலகிற்கே அறிவொளியை தந்த நாளந்தா பல்கலைக்கழகத்துடையது. அதே போன்று, இந்தியாவின் பருப்பு சப்பாத்தி மற்றும் தோசைகள் தான் உயிரோட்டம் தருகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் இந்திய நாட்டைச் சேர்ந்தவன். அதனால் தான் நான் ஒரு இந்தியாவின் மகன் என்றார்.

கடந்த 1949ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்தது. திபெத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என தலாய் லாமா போராடி வருகிறார். அதன் காரணமாக, தலாய் லாமா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 1958 ஆம் ஆண்டு திபெத்திலிருந்து வெளியேறினார். 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dalai lama answer that i am a son of India , my brain is filled with thoughts of nalanda and body survived inda's dal chapathi, dosa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X