டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: உண்மைகளை விரிவாக ஆய்வு செய்து தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றத்திற்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (48), இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா'விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

I am sure Kulbhushan Jadhav will get justice Says PM Modi

அதே நேரம், இந்தியா தரப்பில் வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவின் வழக்கை விசாரித்த, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சர்வ தேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். சத்தியமும் நீதியும் மேலோங்கியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைகளை விரிவாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் தீர்ப்பளித்த ஐ.சி.ஜேவுக்கு வாழ்த்துக்கள் என்றும் குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக எங்கள் அரசு எப்போதும் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
PM Modi Tweet: We welcome today’s verdict in the @CIJ_ICJ. Truth and justice have prevailed. Congratulations to the ICJ for a verdict based on extensive study of facts. I am sure Kulbhushan Jadhav will get justice. Our Government will always work for the safety and welfare of every Indian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X