டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் மகனும், டெய்லரின் மகனும் ஒரே நேரத்தில் ஐஐடியில் படிக்கப்போறாங்க.. முதல்வர் கெஜ்ரிவால் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி : முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் கூறுகையில், டெல்லி அரசு அளித்த இலவச பயிற்சியின் காரணமாக தையல்காரரின் மகனுக்கு ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது. அதில் தையல்காரரின் மகனுடன் என் மகனும் ஐஐடியில் படிக்க உள்ளான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகன் புல்கிட் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களுடன் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்று இருந்தார்.

இவர் ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக ஐஐடியில் சேர்ந்து படிக்க உள்ளார்.

இது எழுத்து யுத்தம்.. இனி சண்டை செஞ்சே ஆகணும்.. சோசியல் மீடியாவில் திமுக-பாஜக மோதல் பகீர் பின்னணிஇது எழுத்து யுத்தம்.. இனி சண்டை செஞ்சே ஆகணும்.. சோசியல் மீடியாவில் திமுக-பாஜக மோதல் பகீர் பின்னணி

தையல்காரர் மகன்

தையல்காரர் மகன்

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், "விஜய் குமார் என்ற மாணவனின் தந்தை தையல்காரர் ஆவார். அவரது அம்மா இல்லத்தரசி ஆவார்.

ஐஐடியில் இடம் பெற்றார்

ஐஐடியில் இடம் பெற்றார்

விஜயக்குமாருக்கு டெல்லி அரசு அளித்த இலவச பயிற்சிக்கு பின் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றதால் அவருக்கு ஐஐடியில் சேர இடம் கிடைத்துள்ளது. என்ற தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் கனவை டெல்லி அரசு நிறைவேற்றியுள்ளது" என்று கூறியுள்ளார்.

டெய்லரின் மகனும் ஐஐடியில்

டெய்லரின் மகனும் ஐஐடியில்

இதனிடையே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்கிழமை வெளியிட்ட பதிவில், "என் மகனும், டெய்லரின் மகனும் ஒரே நேரத்தில் ஐஐடியில் படிப்பார்கள் என்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தரமான கல்வி தர வேண்டும்

தரமான கல்வி தர வேண்டும்

நல்ல கல்வி கிடைக்காத காரணத்தால் ஒரு ஏழையின் மகன் ஏழையாக இருக்க வேண்டிய வழக்கம் காலம் காலமாக உள்ளது. தரமான கல்வியையும், பயிற்சியையும் வழங்குவதன் மூலம் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை நாங்கள்(டெல்லி அரசு) குறைக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

English summary
Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday said "I am very happy that my son and tailor's son will study in IIT at the same time".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X