டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைவர் பதவிக்கு வேறு நபரை பாருங்கள்.. என்னை விடுங்கள்.. கறாராக சொல்லிவிட்ட ராகுல்.. திருப்பம்!

காங்கிரஸ் தலைவர் பதவியில் கண்டிப்பாக நீடிக்க முடியாது வேறு நபரை தேர்வு செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தாக செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைவர் பதவி வேண்டாம் என திட்டவட்டமாக கூறும் ராகுல்- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் கண்டிப்பாக நீடிக்க முடியாது வேறு நபரை தேர்வு செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தாக செய்திகள் வருகிறது.

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பாஜக 303 இடங்களில் தனியாக வென்று பெரும்பான்மை பெற்றது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    டெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்! டெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்!

    ராஜினாமா

    ராஜினாமா

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    ஏற்கவில்லை

    ஏற்கவில்லை

    ஆனால் காங்கிரஸ் செயற்குழு இந்த கடிதத்தை ஏற்கவில்லை. காங்கிரஸ் செயற்குழு இது தொடர்பாக ஒரு மனதாக முடிவெடுத்துள்ளது. ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு முடிவெடுத்து இருக்கிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியில் கண்டிப்பாக நீடிக்க முடியாது வேறு நபரை தேர்வு செய்யுங்கள் என்று கூறி விட்டதாக செய்திகள் வருகிறது. ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல் மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் இப்படி கூறியதாக தகவல் வந்துள்ளது.

    கோபம்

    கோபம்

    ராகுல் காந்தி, தேர்தலில் வெற்றிபெற்ற எந்த காங்கிரஸ் வேட்பாளர்களையும் இதுவரை சந்திக்கவில்லை. அவர் வீட்டிலேயே இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் இந்த செய்தி வெளியாகி உள்ளது/ அதே சமயம் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய மாட்டார். அவர் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக இருப்பார் என்று காங்கிரஸ் கட்சியின் மற்ற மூத்த தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    I can't continue, Go for some other person says Rahul Gandhi on Congress Chief post to senior leaders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X