டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் நினைத்தால் பாஜக ஆட்சி இப்போதே கவிழும்.. சு.சாமி எச்சரிக்கை

மத்திய அரசு என்னை எதிர்த்தால் உடனடியாக அரசை கவிழ்ப்பேன் சேர்ந்த பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு என்னை எதிர்த்தால் உடனடியாக அரசை கவிழ்ப்பேன் சேர்ந்த பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவார்.

சமயங்களில் இவர் பாஜகவிற்கு எதிராகவே கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் ராமர் கோவில் குறித்தும் பாஜக குறித்தம் கருத்து தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில்

ராமர் கோவில்

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அயோத்தி வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. வருகின்ற ஜனவரி மாதம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. விசாரணைக்கு வந்தால் 2 வாரங்களில் வெற்றி கிடைத்துவிடும். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.

ஒப்புதல் வழங்கினார்கள்

ஒப்புதல் வழங்கினார்கள்

இஸ்லாமியர்களுக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எந்த மாற்று கருத்தும், ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் ராமர் கோவில் கட்ட ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த இடம் அவர்களுக்கு சொந்தமில்லை என்று ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள்.

மேலும் பாஜக

மேலும் பாஜக

மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசு என்னுடைய எதிர்கட்சிகள். என்னை எதிர்த்தால் பாஜக தோல்வி அடையும். மத்திய அரசிற்கும் உத்தரப்பிரதேச அரசிற்கும் என்னை எதிர்க்கும் துணிச்சல் இருக்கிறதா. அவர்களுக்கு அதற்கான பலமும் தைரியமும் கிடையாது.

ஆட்சியை கவிழ்ப்பேன்

ஆட்சியை கவிழ்ப்பேன்

தொடர்ந்து பாஜக என்னை எதிர்க்க துணிந்தால் அவர்களின் ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டேன். நான் நினைத்தால் பாஜக ஆட்சி இப்போதே கவிழும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பாஜக கட்சியில் இருந்து கொண்டே அவர் இப்படி பேட்டியளித்த இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது .

English summary
I can topple government at any time says, Subramanian Swamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X