டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த வீடியோவை பார்க்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.. ஆனந்த் மகிந்திரா உருக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: கைகளை இழந்த ஒரு குழந்தை கால்களை வைத்து உணவு எடுத்துக் கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ள மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா தனக்கு இதை பார்க்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற இல்லத்தில் இருந்து வசிலினா என்ற குழந்தையை ஒரு வயதாக இருக்கும் போது ரஷ்யாவின் நட்ஸென் என்பவர் தத்தெடுத்துள்ளார். இருகைகளும் இல்லாத அந்த மாற்றுத் திறனாளி குழந்தைக்கு தற்போது 2 வயதாகிறது. அந்த குழந்தை தன் கால்களால் உணவருந்தக் கற்றுக் கொண்டு உணவருந்தி வருகிறது.

I couldn’t restrain the tears when I saw this whatsapp post: anand mahindra

இந்த காட்சியை வாட்ஸ்அப்பில் பார்த்த மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா, சமீபத்தில் தன் பேரனுடன் இருந்த போது இந்த வீடியோவை பார்த்தேன். அப்போது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறைபாடுகளோ மற்றும் சவால்கள் என எதுவோக இருந்தாலும் வாழ்ககை என்பது ஒரு பரிசு, அதை நாம் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற காட்சிகள் தனது தளராத தன்னம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள உதவுவகிறது" இவ்வாறு ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.

ஆன்ந்த மகிந்திரா கடந்த 20ம் தேதி இந்த பதிவினை வெளியிட்டுஇருந்தார். இந்த விடியோவை பல ஆயிரம் ஷேர் செய்து இருந்தனர். ஏராளமானோர் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவுகள் பார்ப்போரின் கண்களை குளமாக்குகின்றன.

English summary
anand mahindra shares video on twitter: he said, I couldn’t restrain the tears when I saw this whatsapp post:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X