டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவரின் சேனலை நானே பார்க்க மாட்டேன்... ஆனால்.. அர்னாப் கோஸ்வாமி வழக்கில் விளாசிய நீதிபதி சந்திரசூட்!

Google Oneindia Tamil News

டெல்லி: ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வழக்கில் மகாராஷ்டிரா மாநில அரசை உச்ச நீதிமன்றம் நீதிபதி சந்திரசூட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மஹாராஷ்ட்ராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். 2019ல் முடித்து வைக்கப்பட்ட போலீஸ் விசாரணை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கு பெயில் மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக அர்னாப் கோஸ்வாமி தொடுத்த மேல்முறையீட்டு பெயில் மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது.

பீகாரில் நிதீஷ் அலை ஓய்கிறது.. காங். கூட்டணிக்கு பெரும் வெற்றி.. ரிபப்ளிக் டிவி கணிப்பு பீகாரில் நிதீஷ் அலை ஓய்கிறது.. காங். கூட்டணிக்கு பெரும் வெற்றி.. ரிபப்ளிக் டிவி கணிப்பு

அர்னாப் கோஸ்வாமி

அர்னாப் கோஸ்வாமி

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி விசாரணை செய்தனர். இதில் பேசிய சந்திரசூட், இந்த வழக்கில் அர்னாப்பிற்கு பெயில் வழங்க மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அர்னாப்பை கஸ்டடியில் எடுத்து விசாரித்ததையும் ஏற்க முடியாது. உங்களுக்கு அவரின் கொள்கை பிடிக்காமல் இருக்கலாம். நானே அவரின் சேனலை பார்க்க மாட்டேன். ஆனால் அதற்காக நீதியை நிலைநாட்டாமல் இருக்க முடியாது.

 சந்திரசூட் கோபம்

சந்திரசூட் கோபம்

மாநில அரசுகள் சட்டத்திற்கு எதிராக இப்படி செயல்பட்டால்.. உடனே உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதை தடுக்கும். மாநில ஹைகோர்ட்டும் இதில் உறுதியாக செயல்படவேண்டும். சட்டத்தை நிலைநாட்ட அவர்களும் உறுதியாக இருக்க வேண்டும். இதில் ஏன் பெயில் அளிக்க மறுத்தனர்?

அடிக்கடி வருகிறது

அடிக்கடி வருகிறது

இது போன்ற வழக்குகள் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது . உயர் நீதிமன்றங்கள் தங்கள் கடமையை செய்யவில்லை.. மக்கள் ஒரே ஒரு டிவிட் போட்டதற்காக கூட ஜெயிலுக்கு செல்கிறார்கள். இது மிகவும் தவறானது.

ஜனநாயக வலிமை

ஜனநாயக வலிமை

நமது ஜனநாயகம் மிகவும் வலிமையானது. சின்ன சின்ன விஷயத்திற்காகவெல்லாம் கைது நடவடிக்கைகளை எடுக்க கூடாது. அனைத்திற்கும் அரசு கைது நடவடிக்கையை கையில் எடுத்துக் கொண்டு இருக்க கூடாது. தேர்தல் முடிவுகளில் இந்த சேனல்கள் எல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது . அப்படியிருக்கும் போது கைது ஏன்?.

சேனல் பிடிக்கவில்லை

சேனல் பிடிக்கவில்லை

எல்லாவற்றுக்கும் கைது செய்ய கூடாது.உங்களுக்கு ஒரு சேனல் பிடிக்கவில்லை என்றால் அதை பார்க்க வேண்டாம். அதை விட்டுவிட்டு தொகுப்பாளர் மீது நடவடிக்கை ஏன்? இது ஒன்றும் தீவிரவாத வழக்கு கிடையாது. இதில் மனுதாரரின் உரிமையை மறுக்க கூடாது.

எப்ஐஆர்

எப்ஐஆர்

இந்த வழக்கில் இன்னும் முழுமையாக எப்ஐஆர் பதியப்படவில்லை. அதற்குள் அவசரம் ஏன். நீதிமன்றம் இதில் இப்போது உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அரசின் நடவடிக்கையில் தலையிட்டு.. முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

English summary
I don't watch his channel.. but says SC on Arnab Goswami bail hearing case today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X