டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் வைகோவுக்கு ஓடோடி சென்று வாழ்த்து தெரிவித்த சு.சுவாமி!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோவுக்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்தார்

ராஜ்யசபா எம்.பி.யாக 23 ஆண்டுகளுக்கு பின்னர் வைகோ சபைக்குள் நுழைகிறார். பாஜக தலைவர்கள் பலரும் வைகோவுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

I Greeted Vaiko in Parliament, says Subramanian Swamy

வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைவதை மிக கடுமையாக எதிர்த்து ட்விட்டர் பதிவுகளை போட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. ராஜ்யசபா எம்.பி.க்களாக இருவரும் இருந்தபோது வைகோ தமக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சனையை கிளப்பியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி,

அதனால்தான் வைகோவின் வருகை சுப்பிரமணியன் சுவாமியை அச்சமடைய வைத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், வைகோவை நாடாளுமன்றத்தில் பார்த்ததும் ஓடிச் சென்று வாழ்த்து தெரிவித்தேன். அவரும் பத்திரிகையாளர்களிடம் என்னை பற்றி நல்லவிதமாகவே கூறினார்.

ஜனநாயகத்தில் பண்பாடு என்பது அவசியமானது. அரசியல் சட்டம் என்பதும் புனிதமானது இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டிருக்கிறார். வழக்கம் போல சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கத்தில் வசவுகளும் வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

English summary
BJP Rajya Sabha MP Subramanian Swamy posted a tweet in his page that "I ran into Vaiko in the corridors of Parliament today. Greeted and wished him well. He too told the media some complimentary views about me. Shishtachaar is essential in a democracy. Constitution is sacred".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X