டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை மோசமான நிதி அமைச்சர் என்கிறார்கள்.. ஐடியா கொடுங்கள்.. பொங்கிய நிர்மலா சீதாராமன்!

என்னை பலரும் நான் மோசமான நிதி அமைச்சர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் நான் சொல்லும் கருத்தை கேட்பதே இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பேசி உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: என்னை பலரும் நான் மோசமான நிதி அமைச்சர் என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் எல்லாம் நான் சொல்லும் கருத்தை கேட்பதே இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பேசி உள்ளார்.

இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது.

இதை பலரும் விமர்சித்து வருகிறார்கள். முக்கியமாக இந்தியாவின் பொருளாதார சரிவால் கார்ப்ரேட் நிறுவனங்கள் அச்சத்தில் இருக்கிறது என்று பஜாஜ் நிறுவனர் தலைவர் ராகுல் பஜாஜ் விமர்சனம் செய்துள்ளார். அவரின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர்.. கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்த மக்கள் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர்.. கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்த மக்கள்

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதற்கு பதில் தரும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பேசி உள்ளார். அதில், என்னை பலரும் நான் மோசமான நிதி அமைச்சர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் நான் சொல்லும் கருத்தை கேட்பதே இல்லை. அவர்கள் நான் என்னுடைய பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பதில்

பதில்

நான் முழுதாக நிதி அமைச்சர் பதவியில் நீடிக்க கூடாது என்று நினைக்கிறார்கள். நீங்கள் ஐடியா கொடுத்தால் அதை நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம். நாங்கள் எதையும் கேட்க தயாராக இருக்கிறோம். பிரதமர் மோடி ஆட்சிதான் விமர்சனங்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறது.

நண்பர்கள்

நண்பர்கள்

சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக பலர் பேசி வருகிறார்கள். எனக்கு தெரிந்த நண்பர்கள் கூட எனக்கு எதிராக பேசி வருகிறார்கள். பொருளாதாரம் சரியாகி வருகிறது. சீக்கிரம் இயல்பு நிலையை அடையும்.

ஜிடிபி எப்படி

ஜிடிபி எப்படி

இந்தியாவின் ஜிடிபி நன்றாகத்தான் இருக்கிறது. இதற்கு முன் இருந்த ஜிடிபி உடன் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும். தற்போது நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்கான பலன்கள் தெரியும்.

English summary
I have been told that I am the worst Finance Minister, says Nirmala Sitharaman in Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X