டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா... நரேந்திர மோடி சொன்னதையே... சொல்லும் ஜெகன்மோகன் ரெட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: நரேந்திர மோடி என்ன சொன்னாரோ, அதனையே ஆந்திரா மாநில முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டியும் கூறியுள்ளார்.

ஆந்திராவில் மொத்தமுள்ள 176 தொகுதிகளில் 151 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வருகிற 30ம் தேதி பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, இன்று நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

Ill make it a point to remind him every time, of Special Category Status Says Jagan Mohan Reddy

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலங்களில் ஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி என்றார். அடுத்த ஓராண்டில் நாட்டின் முன் மாதிரி மாநிலமாக ஆந்திராவை மாற்றிகாட்டுவேன். நான் யாருக்கு எதிராகவும் செயல்படமாட்டேன்; மக்களின் பாதுகாவலனாக இருப்பதே என் கடமை என்று நரேந்திர மோடி ஸ்டைலில் பேசினார்.

இந்தநிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டியுடன் அற்புதனமான சந்திப்பு நடைபெற்றதாக ட்விட்டரில் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். மேலும், இந்தச் சந்திப்பில் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடந்தது. மத்திய அரசிலிருந்து ஆதரவு வழங்கப்படும் என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோடியோட ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்க போறாங்க.. மாநிலங்களவையிலும் தனிப்பெரும்பான்மை மோடியோட ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்க போறாங்க.. மாநிலங்களவையிலும் தனிப்பெரும்பான்மை

முன்னதாக, நாட்டின் பாதுகாவலான இருப்பேன். யார் மீதும் வெறுப்பு இல்லை. அணைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம், மாற்றுவோம் என்று நரேந்திர மோடி பேசினார். அதே நேரம், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு வரை, பாதுகாவலன் என "சௌகிதார் நரேந்திர மோடி" என்று தமது பெயருக்கு முன் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Andhra CM designate Jagan Mohan Reddy: Today was the first meeting with PM. God willing I'll probably meet him maybe 30, 40, 50 times over these 5 years. I'll make it a point to remind him every time, of Special Category Status.As long as we keep reminding, things will change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X