• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வேர்க்குதா.. அப்படியே நல்லா மசாஜ் பண்ணுங்க.. என்னை போலவே பளபளன்னு ஆயிருவீங்க.. மோடி சூப்பர் டிப்ஸ்!

|

டெல்லி: "என் முகம் மட்டும் எப்படி இப்படி பளபளன்னு மின்னுது தெரியுமா.. என்னை போலவே நீங்களும் அழகாக வேண்டுமா? என்னை போலவே உங்கள் முகமும் பொலிவு பெற வேண்டுமா.. அப்படின்னா இதை செய்யுங்கள்" என்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு பியூட்டி டிப்ஸ் ஒன்றினை தந்துள்ளார்.

பாரத பிரதமர்களிலேயே செம மாஸாக வலம் வருபவர் நம் நரேந்திர மோடி.. வித்தியாசமான கோட் - சூட், கண்ணாடி, குர்தாக்களை அணிபவர்.. அதுவும் வெளிநாடுகளுக்கு போனால் இவரது கலர்புல் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் படு வைரலாகும்.

I Massage My Face with Sweat says PM Modi

இதுபோக எந்த மாநிலத்துக்கு போவாரோ, அந்த மாநிலத்தின் பாரம்பரிய டிரஸ்களையும் அணிந்து, அம்மாநில மக்களுக்கு சந்தோஷத்தை தருவார். இது எல்லாவற்றுக்கும் மேலாக மிடுக்கும், கம்பீரமும் உடையவர் பிரதமர் மோடி.. இவரது சுறுசுறுப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டு வரும் ஒன்று!

இந்நிலையில், தன் முக பளபளப்பு ரகசியம் குறித்து மோடி ஒரு டிப்ஸ் தந்துள்ளார்.. பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்து பிரதான் மந்திரி பால் புரஸ்கார் விருதுகளை பெற்ற சிறுவர்களை மோடி சந்தித்தார்.. அனைவருமே மோடியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.. அவர்களிடம் மோடி பேசியது இதுதான்:

"இந்த இளம் வயதிலேயே நீங்கள் வெளிப்படுத்தி இருக்கும், வெளிப்படுத்தி வரும் திறன், உழைப்பு எனக்கு வியப்பாக இருக்கிறது.. வெற்றியாளர்களில் 2 வகை உள்ளனர்.. ஏதாவது ஒரு துறையில் வெற்றி பெற்றாலும், தலைகனத்துடன் யாருடனும் சேர்ந்து ஆலோசிக்காமல், உழைக்கவும் செய்யாமல் அப்படியே தேங்கிவிடுகிறார்கள்.. இது ஒரு வகை!

தங்களுக்கு கிடைத்த வெற்றியால் வரம் பாராட்டுகளை ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு, தொடர்ந்து உழைப்பு, உழைப்பு என்று ஓடிக்காண்டே இருப்பார்கள், இது மற்றொரு வகை" என்று மாணவர்களிடம் பலம் வாய்ந்த கருத்துக்களை எடுத்து வைத்து கொண்டே வந்தவர்.. திடீரென தன் அழகை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.

ஒருமுறை மோடியை பார்த்து ஒருவர், உங்கள் முகம் மட்டும் எப்படி இப்படி தேஜஸாக, பிரகாசமாக இருக்கிறதே, அதற்கு என்ன காரணம் என்று கேட்டாராம். அதற்கு "நான் மிகவும் கடுமையாக உழைப்பேன்.. எனக்கு நிறைய வியர்க்கும்.. அந்த வியர்வையோடு முகத்தை மசாஜ் செய்வேன்" என்று பதில் சொன்னாராம்..

அப்படி மசாஜ் செய்ததால்தான் தன் முகம் பிரகாசமாக, தேஜஸாக மின்னுகிறது என்று விளக்கமும் தந்தாராம். இந்த உதாரணத்தை எடுத்து சொன்ன பிரதமர், மாணவர்களும் குறைந்தது 4 முறையாவது வியர்க்கும்படி வேலை செய்யுங்கள்" என்று டிப்ஸ் & அட்வைஸ் தந்தார்.

 
 
 
English summary
'I Massage My Face with Sweat' PM Modi says about hard work and secret behind his glowing skin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X