டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.. பிரக்யா தாக்கூர் ஒரு தீவிரவாதிதான்.. ராகுல் காந்தி கடும் பாய்ச்சல்

பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் ஒரு தீவிரவாதிதான், என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன், நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.. பிரக்யா | Pragya Thakur clarifies her stand on Godse

    டெல்லி: பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் ஒரு தீவிரவாதிதான், என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன், நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று லோக்சபாவில் குறிப்பிட்டார். இதனால் அவையில் பெரிய சர்ச்சை உருவானது. திமுக எம்பி ஆ. ராசாவின் பேச்சுக்கு இவர் இப்படி பதில் அளித்தார்.

    இந்திய அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக இது பெரிய சர்ச்சையானது. இவரின் பேச்சுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

    வருந்த வேண்டும்.. விடாமல் அமளி செய்த எதிர்க்கட்சிகள்.. மீண்டும் மன்னிப்பு கேட்ட பிரக்யா தாக்கூர்! வருந்த வேண்டும்.. விடாமல் அமளி செய்த எதிர்க்கட்சிகள்.. மீண்டும் மன்னிப்பு கேட்ட பிரக்யா தாக்கூர்!

    ராகுல் எப்படி

    ராகுல் எப்படி

    இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்த கருத்தில், ஒரு தீவிரவாத பிரக்யா தாக்கூர் இன்னொரு தீவிரவாதி கோட்சேவை, தேச பக்திமான் என்று அழைக்கிறார். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் வருத்தமான நாள், என்று டிவிட் செய்து இருந்தார்.

    என்ன பதில்

    என்ன பதில்

    இந்த நிலையில் இது தொடர்பாக பிரக்யா தாக்கூர் பதில் அளித்தார். அதில், நான் தீவிரவாதி கிடையாது. எனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. என் புகழை கெடுக்க வேண்டும் என்று இப்படி பேசுகிறார்கள் என்று பிரக்யா குறிப்பிட்டு இருந்தார்.

    பாஜக எம்பி

    பாஜக எம்பி

    இதையடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பாஜக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். பிரக்யா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் இதில் உடனே ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

    மன்னிப்பு கோரிக்கை

    மன்னிப்பு கோரிக்கை

    ராகுல் காந்தி அவரின் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் அமளியில் ஈடுப்பட்டனர். இதற்கு தற்போது ராகுல் காந்தி பதில் அளித்தார். அதில், நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். டிவிட்டரில் நான் சொன்னதுதான் இங்கும் சொல்கிறேன்.

    முடியாது

    முடியாது

    பிரக்யா தீவிரவாதிதான். ஆம். எனக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் இருந்து நான் மாற மாட்டேன், என்று குறிப்பிட்டார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். இதில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்கூர். பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது பாஜக சார்பாக போபால் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகிவிட்டார்.

    English summary
    I stand with my opinion, Yes Pragya Thakur is a terrorist says, Rahul Gandhi after demands for Privilege Motion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X