டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதே ஸ்டைல் ஆபரேஷன்.. துரைமுருகன் வீட்டில் நடந்தது போலவே ரெய்டு.. வடஇந்தியா முழுக்க பரபரப்பு!

வடஇந்தியாவில் அதிரடியாக நடக்கும் வருமானவரித்துறை சோதனை, தமிழகத்தில் நடத்தப்பட்டது போலவே முறையான திட்டமிடலுடன் செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    துரைமுருகன் வீட்டில் போலவே வட மாநிலங்களிலும் அதிரடி ரெய்டு

    டெல்லி: வடஇந்தியாவில் அதிரடியாக நடக்கும் வருமானவரித்துறை சோதனை, தமிழகத்தில் நடத்தப்பட்டது போலவே முறையான திட்டமிடலுடன் செய்யப்படுகிறது. முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த சோதனையில் சிக்கி இருக்கிறார்கள்.

    டெல்லி, மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. இது வடஇந்தியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ம.பி முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர் வீட்டிலும் கடும் சோதனை நடைபெற்று வருகிறது. 500க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் ரெய்டு

    தமிழகத்தில் ரெய்டு

    தமிழகத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் நடந்த ரெய்டு போலவேதான் இந்த ரெய்டும் நடந்து இருக்கிறது, முதலில் தேர்தல் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில்தான் அதிகாரிகள் உள்ளே வந்து சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதன் பின்பாகவே அது தேர்தல் அதிகாரிகள் சோதனை கிடையாது, ஐடி சோதனை என்று கூறப்பட்டு இருக்கிறது.

    டெல்லி, கோவா, ம.பியில் 60 இடங்களில் ஐடி ரெய்டு.. ம.பி முதல்வர் கமல்நாத் உதவியாளர் வீட்டிலும் சோதனை டெல்லி, கோவா, ம.பியில் 60 இடங்களில் ஐடி ரெய்டு.. ம.பி முதல்வர் கமல்நாத் உதவியாளர் வீட்டிலும் சோதனை

    குழப்பம்

    குழப்பம்

    தேர்தல் நேரத்தில் கருப்பு பணம் அதிகம் புழங்குகிறது என்று வந்த புகாரை அடுத்து வருமானவரித்துறை இந்த சோதனையை நடத்தி இருக்கிறது. மொத்தம் 60 இடங்களில்தான் வருமானவரித்துறை சோதனை நடக்கிறது. ஆனால் இன்னும் சில இடங்களில் மேலும் சோதனை நடக்கும் என்று கூறுகிறார்கள்.

    முக்கியம்

    முக்கியம்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பெரிய நிறுவனங்களான அமிரா குரூப், மோஸர் பயர், ராத்தூல் பூரி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடக்கிறது. இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒரு வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நெருக்கமான நிறுவனம் ஆகும்.

    மாநில முதல்வரே குறி

    மாநில முதல்வரே குறி

    இதில் மத்திய பிரதேசத்தில் மாநில முதல்வரே குறிவைக்கப்பட்டு இருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். மாநில முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர் உள்ளிட்ட அவரின் நெருக்கமான நபர்களுக்கு சொந்தமான 25 இடங்களில் சோதனை நடக்கிறது. மத்திய ரிசர்வ் படையை ஐடி அதிகாரிகள் இந்த சோதனையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    என்ன குற்றச்சாட்டு

    என்ன குற்றச்சாட்டு

    இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் தடங்கல் ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக அரசு இப்படி செய்வதாக காங்கிரஸ் தரப்பு கூறி இருக்கிறது.

    English summary
    I-T dept is conducting searches at 50 locations. Searches underway at locations of MP Chief Minister's OSD, Ratul Puri, Amira Group, &Moser Bayer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X