டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் தற்சார்பு பாரதம் என்கிற கோட்பாடானது கொரோனா தடுப்பூசியை தயார் செய்துவிட்டது; அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை:

சகோதரத்துவம் என்பது இல்லாது போயிருந்தால், நம்மால் இந்தப் பெருந்தொற்றிற்கு எதிராக இத்தனை பலமான பதிலடி கொடுத்திருக்க முடியாது போயிருக்கும். மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நலவாழ்வுத் துறையோடு தொடர்புடைய நிர்வாகத்தினர், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரை குறிப்பிட்டுப் பாராட்ட விரும்புகிறேன்.

நீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரைநீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தொற்று காலத்தில் கல்வி கற்பதில் ஏற்பட்ட சிரமங்களை நமது கல்வி அமைப்புக்களும், நிறுவனங்களும், ஆசிரியர்களும், புதிய தொழில்நுட்பத்தை விரைவாகக் கைக்கொண்டு, மாணவர்களின் கல்வி தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்தனர்.

கற்றல் ஆண்டு

கற்றல் ஆண்டு

தற்போதைய ஜி.எஸ்.டி வருவாயில் சாதனை படைக்கும் அதிகரிப்பு, அந்நிய முதலீடுகளைக் கவரக்கூடிய பொருளாதார அமைப்பு என்ற வகையில் பாரதம் உருவாகுதல் ஆகியன, நமது பொருளாதார மீட்சிக்கான அடையாளக் குறியீடுகள். 2020ஆம் ஆண்டினை நாம் கற்றல் ஆண்டாகவே கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.

தற்சார்பு பாரதம்

தற்சார்பு பாரதம்

சங்கடத்தை சந்தர்ப்பமாக மாற்றி, பிரதமர் தற்சார்பு பாரத இயக்கத்தை அறிவித்தார். தற்சார்பு பாரதம், கொரோனா நுண்கிருமியிடமிருந்து தற்காத்துக் கொள்ள, தனக்குரிய தடுப்பூசியைத் தயார் செய்து விட்டது.

அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்

அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பெருந்துறை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு தடுப்பூசியை கிடைக்க செய்து வருகிறோம். இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

English summary
President Ram Nath Kovind said that "I urge upon countrymen to get vaccinated as per guidelines. Your health opens the way for your advancement in his Republic Day Address.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X