டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதே டெய்லர்.. அதே வாடகை.. 2014ல் மோடி கொடுத்த வாக்குறுதியை 2019க்காக கையில் எடுத்த நிதின் கட்கரி!

2019 மார்ச் மாதத்திற்குள் கங்கை நதியை 80 சதவிகிதம் சுத்தம் செய்துவிடுவோம் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: 2019 மார்ச் மாதத்திற்குள் கங்கை நதியை 80 சதவிகிதம் சுத்தம் செய்துவிடுவோம் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

2014 லோக் சபா தேர்தலில் பாஜக நிறைய முக்கியமான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தேர்தலில் வெற்றிபெற்றது. மோடி கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் கருப்பு பணத்தை மீட்பது, ராமர் கோவில் கட்டுவது மற்றும் கங்கையை சுத்தம் செய்வது முக்கிய பங்கு வகித்தது.

ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முக்கியமாக கங்கை நதியை சுத்தம் செய்வதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கண்டனம் தெரிவித்தனர்

கண்டனம் தெரிவித்தனர்

இது பக்தர்களை, இந்து மத துறவிகளை பெரிய அளவில் ஏமாற்றத்திற்கு உள்ளாகியது. இதுவரை ஒரு சதவிகிதம் கூட கங்கை நதி சுத்தம் செய்யப்படவில்லை. மத்திய அரசின் இந்த செயலை பார்த்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கூட மத்திய அரசு கங்கை நதியை சுத்தம் செய்யாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

கண்டிப்பாக முடியும்

கண்டிப்பாக முடியும்

இந்த நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த சாலை போக்குவரத்துத்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கங்கை நதியை விரைவில் சுத்தம் செய்வேன் என்று கூறியுள்ளனர். இதற்கான திட்ட பணிகள் விரைவில் தொடங்கும். ஆய்வுகள் தற்போது நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

மீதம் உள்ள பணிகள்

மீதம் உள்ள பணிகள்

அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் 80 சதவிகித பணிகளை முடித்துவிடுவோம் என்று கூறி இருக்கிறார். அதன்பின் 2020க்குள் மீதமுள்ள பணிகளை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தில் கங்கை நீர் குளிப்பதற்கு ஏற்ற நீராக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.

கையில் எடுத்துள்ளார்

கையில் எடுத்துள்ளார்

2014 மோடி கொடுத்த வாக்குறுதியை தற்போது நிதின் கட்கரி மீண்டும் கையில் எடுத்து இருப்பது பெரிய கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏற்கனவே பாஜகவின் தேர்தல் வேட்பாளராக மோடிக்கு பதில் 2019ல் நிதின் கட்கரி நிறுத்தப்படுவாரா என்று விவாதம் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் நிதின், மோடியின் வாக்குறுதிக்கு உயிர் கொடுத்து இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

English summary
I will clean the Ganges in 1 year says BJP Minister Nitin Gadkari, erupts new fire in BJP party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X