டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேப் இன் இந்தியா கருத்து- மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை- ராகுல் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் ரேப் இன் இந்தியா என தாம் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா பலாத்காரங்களின் தலைநகராக மாறிவருகிறது என்பது ராகுல் காந்தியின் விமர்சனம். இதனை குறிப்பிடும் வகையில் பிரதமரின் மேக் இன் இந்தியா போல ரேப் இன் இந்தியா என நிலைமை உருவாகிவிட்டது என கூறியிருந்தார் ராகுல் காந்தி.

I will not apologize for Rape in India remark, says Rahul Gandhi

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள், எங்களை பலாத்காரம் செய்ய அழைப்பு விடுக்கிறாரா ராகுல்? அவர் தமத்உ கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்திருக்கிறன. இத்தகைய பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பால் இந்தியாவின் கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜகவில் இணைகிறார் ஜீவஜோதி... அழைப்புவிடுத்த வானதி சீனிவாசன் பாஜகவில் இணைகிறார் ஜீவஜோதி... அழைப்புவிடுத்த வானதி சீனிவாசன்

பலாத்காரங்களின் தலைநகராக மாறிவிட்டது டெல்லி என பிரதமர் மோடியே ஏற்கனவே கூறியுள்ளார். ஆகையால் பாஜகவின் கோரிக்கையை ஏற்று ரேப் இன் இந்தியா என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

வடகிழக்கு மாநிலங்கள் போராட்டங்களை திசைதிருப்பும் வகையில்தான் பாஜகவின் இதனை கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

English summary
Congress Senior leader Rahul Gandhi has said that, I will not apologize for 'Rape in India' remark.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X