டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு பயமாக இருக்கிறது.. தலைமை நீதிபதிக்கு எதிராக புகாரளித்த பெண் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அதன் மீதான விசாரணையில் ஆஜராக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அதன் மீதான விசாரணையில் ஆஜராக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அவர் பரபரப்பான காரணமும் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இது இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்த பிரச்சனை தற்போது இரண்டு விதமாக விசாரிக்கப்படுகிறது.

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண், ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர். 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இது தொடர்பாக அந்த பெண் பிரமாணபத்திரம் அனுப்பி உள்ளார்.

பேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை பேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை

என்ன கூறினார்

என்ன கூறினார்

ஆனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ''இது போன்ற பொய்ப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. நீதித்துறையின் ஸ்திரத்தன்மையை உடைப்பதற்கு யாரோ பின்னிலிருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். '' என்று குறிப்பிட்டார். இந்த புகார் மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி போட்பே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

எப்படி விசாரணை

எப்படி விசாரணை

இந்த புகார், நீதிமன்ற உள்விசாரணையாக நடக்கிறது. நீதிமன்ற விவகாரம் என்பதால் கண்ணியம் காப்பதற்காக உள் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் நடந்த முதற்கட்ட விசாரணையில் புகார் அளித்த பெண் ஏற்கனவே ஆஜராகி தனது வாக்கு மூலத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது

ஆனால் இப்போது

ஆனால் இப்போது திடீர் திருப்பமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அதன் மீதான விசாரணையில் ஆஜராக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நான் இனி இந்த விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன். என்னிடம் அதற்கான தைரியம் கிடையாது என்று இவர் தெரிவித்துள்ளார்.

என்ன கூறினார்

என்ன கூறினார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு இந்த விசாரணை குழுவால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. மூன்று நீதிபதிகளை பார்க்கவே எனக்கு அச்சமாக இருக்கிறது. ஒரு வழக்கறிஞர் இல்லாமல் இவர்கள் முன் நிற்கவே எனக்கு அச்சமாக உள்ளது. அதனால் நான் இந்த வழக்கில் ஆஜராக போவதில்லை, என்று கூறியுள்ளார்.

என்ன விசாரணை

என்ன விசாரணை

அதே சமயம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் பெயின்ஸ் தாக்கல் செய்த பிரமாணபத்திரம் மீது விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே பட்நாயக் தலைமையில் இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

English summary
I Got nervous, I won't appear before investigation says Complainant on CJI harassment case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X