டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாயமான ஏ.என்-32 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது.. 13 பேர் கதி என்ன?

Google Oneindia Tamil News

தகவல் கிடைத்துள்ளது. எனினும் இதில் பயணித்தவர்களின் நிலை என்னவானது என்ற தகவலை இதுவரை கண்டறிய முடியவில்லை.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் மிகவும் சிறிய ரக விமானம் ஆகும். இதில் 25 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த விமானங்களில் உணவு பொருள் எடுத்துச் செல்வதற்கும், மலை பாங்கான பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த விமானம் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம் பகுதியில் இருந்து மதியம் 12.25 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

துண்டிப்பு

துண்டிப்பு

மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் சீன எல்லை அருகே உள்ளது. இந்த நிலையில் கடந்த 1 மணியிலிருந்து அந்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. சுமார் 2 மணி நேரமாக இந்த விமானத்தை காணவில்லை. காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் சுகோய் 30, சி-130 ரக விமானங்கள் ஈடுபட்டன

விபத்தில் சிக்கி நொறுங்கியது

விபத்தில் சிக்கி நொறுங்கியது

இந்நிலையில் மாயமான இந்திய விமான படையின் ஏ.என்-32 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது அருணாசலப்பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின்டாடோ என்ற இடத்தில் மாயமான விமான பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன

13 பேரின் நிலை என்ன

13 பேரின் நிலை என்ன

மாயமான இந்திய விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியுள்ளது உறுதியான நிலையில் அதில் பயணம் செய்த 13 பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை இந்த விமானத்தில் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேர் பயணம் செய்ததாக விமானப்படை தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

ஏஎன் ரகம்

ஏஎன் ரகம்

அதுபோல் கடந்த ஜூன் 2016-ஆம் ஆண்டு சென்னை தாம்பரம் விமான தளத்திலிருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 29 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற இந்திய விமான படையின் ஏஎன் 32 ரக விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்தது.

கிடைக்கவில்லை

கிடைக்கவில்லை

இதையடுத்து தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு வரை அந்த விமானம் கடல்பகுதியில் தேடப்பட்டது. எனினும் அந்த விமானம் கிடைக்கப்படவில்லை.

விடை தெரியா 29 பேரின் நிலை

விடை தெரியா 29 பேரின் நிலை

இதனால் கடலில் விழுந்து விமானம் நொறுங்கியிருக்கலாம் என்றும் அதில் பயணம் செய்த 29 பேரும் பலியாகியிருக்கக் கூடும் என கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வரை அந்த விமானத்தில் நிலை தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது சீன எல்லை அருகே காணாமல் போன இந்திய விமான படைவிமானம் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

English summary
IAF AN-32 type aircraft was missing from more than 2 hours near Arunachal Pradesh with 13 persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X