டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கம் ரிட்டர்ன்: மீண்டும் போர் விமானத்தை இயக்கினார் அபிநந்தன்.. விமானப்படை தளபதியும் உடன் பறந்தார்

Google Oneindia Tamil News

மீண்டும் களமிறங்கினார் அபிநந்தன் டெல்லி: மிக்-21 விமானத்தை மீண்டும் இயக்கி பயிற்சி பெற்று அசத்தினார் விங் கமாண்டர் அபிநந்தன். ஏர் சீப் மார்ஷல் தனோவா அபிநந்தனுடன் இணைந்து விமானத்தில் பறந்தது சிறப்பாகும்.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி, இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 ரக விமானத்தில், அந்த நாட்டு படையினர் இந்திய எல்லைக்குள் புகுந்தபோது, அதை தனது மிக்-21 வகை போர் விமானத்தை கொண்டு எதிர்த்து விரட்டியடித்தார் அபிநந்தன்.

IAF Chief Dhanoa, Abhinandan fly MiG-21 together

ஆனால் எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாரசூட்டில் குதித்து தப்பினார் அபிநந்தன். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச சமூகம் மூலமாக இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அடுத்த சில நாட்களில் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பிறகு மீண்டும் அபிநந்தன் இன்று பணிக்கு திரும்பியுள்ளார்.

பதன்கோட் விமான தளத்தில் இன்று மிக்-21 போர் விமானத்தை இயக்கி அவர் பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன், விமானப்படை தலைமை தளபதி தனோவா பயணித்து அசத்தினார்.

விமானப்படையின் தளபதியே அபிநந்தனுடன் இணைந்து பயணித்து இருப்பது, அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

கூவம் நதியை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்? உச்சநீதிமன்றம் விளக்கம்கூவம் நதியை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்? உச்சநீதிமன்றம் விளக்கம்

பொதுவாக எதிரி நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட, அல்லது விபத்துக்குள்ளான விமானத்தின் அதே விமானி போர் விமானத்தை மீண்டும் இயக்குவது
என்பதெல்லாம் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. ஆனால் அபிநந்தன் மிகுந்த தைரியசாலி. பாகிஸ்தானில் அவர் சிறை பிடிக்கப்பட்டபோது இந்தியா தொடர்பான எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்து தனது நெஞ்சுரத்தை காட்டினார்.

IAF Chief Dhanoa, Abhinandan fly MiG-21 together

இப்போது மருத்துவ சிகிச்சை, பயிற்சி என அனைத்தும் முடிந்து மீண்டும் மிக்-21 ரக விமானத்தில் அபிநந்தன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அபிநந்தன் மீண்டும் வருகை தந்துள்ளதை, சிங்கம் களம் இறங்கிவிட்டது என்று சிலாகிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

பைசன் வகை விமானத்தை கொண்டு மிக அதி நவீன போர் விமானமான பாகிஸ்தானின் f 16 ரக விமானத்தை அபிநந்தன் தாக்கி அழித்தார் என்றால் அவரது தனிப்பட்ட திறமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

அத்தகைய வீரம் மற்றும் திறமைமிக்க அபிநந்தனை பணியிலிருந்து இழக்க, விமானப்படை தயாரில்லை. எனவேதான் அவருக்கு இந்த அளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Pathankot: IAF Chief Air Chief Marshal BS Dhanoa and Wing Commander Abhinandan Varthaman moving towards the MiG-21 before their sortie earlier today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X