டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய விமானப்படை...ரபேல் தெரியும்...இந்த ஊழல் தெரியுமா...அதிரடி ரெய்டு!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய விமானப்படைக்கு கடந்த 2009ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பிளடஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 75 பயிற்சி விமானத்தில் ஊழல் ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து இன்று நாட்டின் பல்வேறு நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

டெல்லி, குர்காவன், சூரத் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. சட்ட விரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மத்திய அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்டுவதற்கு என்று சோதனை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

IAF Pilatus jet scam: raids in many places in India by enforcement Directorate

இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுத பேர ஆலோசகர் சஞ்சய் பண்டாரி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சொத்து வாங்கிக் குவித்துள்ளார் என்று இவர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

ரெட் கலர் கார்.. ஆசை ஆசையாக உள்ளே ஏறிய 3 பெண் குழந்தைகள்.. சடாரென மூடிய கதவு.. கொடுமை!ரெட் கலர் கார்.. ஆசை ஆசையாக உள்ளே ஏறிய 3 பெண் குழந்தைகள்.. சடாரென மூடிய கதவு.. கொடுமை!

இந்த வழக்கில் ரூ. 2,895 கோடிக்கு ஊழல் நடந்து இருப்பதாக சிபிஐ கடந்தாண்டு ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்திருந்தது. இதில் பண்டாரி மற்றும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. ஒப்பந்தம் பெறுவதற்கு விண்ணப்பித்த நிறுவனங்களில் ஒன்றாக சுவிஸ் நிறுவனமும் ஒன்று.

English summary
IAF Pilatus jet scam: raids in many places in India by enforcement Directorate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X