டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விமானி அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை.. வளர்ந்தது சென்னை.. அதிர்ச்சி தகவல்கள்!

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்தியா விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இதன் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் என்ன ஆனார் என்பதுதான் தற்போது மிக முக்கியமான கேள்வியாக உருவெடுத்துள்ளது,

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் காணாமல் போனார். அவர் இப்போது பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய தரப்பு அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

    ஐநா முறையீடு

    ஐநா முறையீடு

    இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் அபிநந்தன் காணாமல் போனதையும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்தால், ஐநாவில் கூறி இதுகுறித்து முறையிடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    யார் இவர்

    யார் இவர்

    தற்போது அபிநந்தன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான். இவரின் சர்வீஸ் எண் 27981. இவரின் விங் கமாண்டர் விமானி. இவர் 173 கோர்ஸ் பிரிவை சேர்ந்தவர்.

    அப்பாவும்

    அப்பாவும்

    இவரின் அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் ஏர்மார்ஷலாக இருந்தார். 2004ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார் அபிநந்தன், என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ஊர்

    ஊர்

    அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். இவர் படித்தது, வளர்ந்தது, விமானபடைக்கு முதற்கட்ட பயிற்சி எடுத்தது எல்லாம் சென்னையில்தான். அதன்பின் வடமாநிலங்களில் பல இடங்களில் ராணுவ முகாம்களில் பணியாற்றி இருக்கிறார். அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை அருகே திருப்பனவூர் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அபிநந்தன் குடும்பத்தினர் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

    English summary
    IAF pilot Abhinandan belongs to Chennai, Now got into the hands of Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X