டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வான் வருவான்.. ஹீரோ அபிநந்தனை பார்க்க விரைந்த பெற்றோர்.. சென்னையிலிருந்து டெல்லி சென்றனர்!

பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் விமானி அபிநந்தனை சந்திக்க அவரின் பெற்றோர் டெல்லி சென்றுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானிலிருந்து இன்று இந்தியா திரும்புகிறார் அபிநந்தன்- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் விமானி அபிநந்தனை சந்திக்க அவரின் பெற்றோர் டெல்லி சென்றுள்ளனர்.

    இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இருக்கும் அவர், இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுத்த முடிவு காரணமாக அவர் இந்தியா வருகிறார்.

    IAF Pilot Abhinandans parents reach Delhi to receive him fro Pakistan

    அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று இம்ரான் கான் நேற்று கூறினார். தற்போது விமானி அபிநந்தனை சந்திக்க அவரின் பெற்றோர் டெல்லி சென்றுள்ளனர்.

    பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட உள்ளார். லாகூரில் இருந்து ராணுவ பாதுகாப்புடன் வாகா எல்லை கொண்டு வரப்படுவார். வாகா எல்லையில் இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்படுகிறார்.

    [Read more: உலகையே திரும்பி பார்க்க வைத்த பாகிஸ்தான்.. 48 மணி நேரத்தில் ஒரு நாட்டின் முகத்தை மாற்றிய தமிழர்! ]

    பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபினந்தனை வரவேற்க அவரது தந்தை வர்த்தமான், தாயார் ஷோபனா ஆகியோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டனர். வாகாவில் இருந்து அபிநந்தன் விமானப்படை தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.

    அங்கிருந்து பின் விமானம் மூலம் டெல்லி வருகிறார். டெல்லி வரும் அவரை அவரது பெற்றோர்கள் வரவேற்க இருக்கிறார்கள்.

    English summary
    IAF Pilot Abhinandan's parents reach Delhi to receive him, who today to be released from Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X