டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பசங்களா! ஹேப்பி நியூஸ்!.. டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது.. மத்திய அரசு உறுதி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது என மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் எனும் உயிர்கொல்லி பரவி அங்கு ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கியது. இந்த நிலையில் அந்த வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு அடுத்த நிகழ் கல்வியாண்டுக்கான பாடப்பிரிவுகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடங்கியுள்ளன.

மூளை ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை.. கொரோனா பாதிப்பும் உறுதி.. வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி மூளை ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை.. கொரோனா பாதிப்பும் உறுதி.. வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

இந்த நிலையில் பள்ளிகள் இந்த மாதம் திறப்பு, அடுத்த மாதம் திறப்பு என உறுதி செய்யப்படாத தகவல்கள் சமூகவலைதளங்களில் வலம் வருகின்றன. பள்ளித் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

அதில் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பெற்றோரும், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரடியாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு

பெரும்பாலான பெற்றோர்கள் கொரோனா தங்கள் மாநிலத்தை விட்டு குறைந்தவுடனே பள்ளிகளை திறக்க வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பினால் எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை முதலில் கூறுங்கள், அதை வைத்து நாங்கள் கருத்து சொல்கிறோம் என்கிறார்கள்.

அரையாண்டு தேர்வு

அரையாண்டு தேர்வு

தற்போது கொரோனா இல்லாமல் பள்ளிகள் திறந்திருந்தால் இன்னேரம் காலாண்டு தேர்வு நடந்து முடிந்திருக்கும். டிசம்பரில் அரையாண்டு தேர்வுக்கான பாடங்கள் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் நவம்பரில் திறக்கப்படும் என்ற கருத்தை தமிழக அரசு மறுத்துள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம்

நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம்

இந்த நிலையில் டெல்லியில் நடந்த மத்திய மனித வள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறுகையில் வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றார். எனவே இவர் சொல்வதை பார்த்தால் அடுத்த ஆண்டு 2021-இல்தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிகிறது.

English summary
Union Higher education department secretary Amit Khare says that there is no chance of opening the schools and colleges till December.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X