டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதனுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜினாமா ஏற்கப்படும் வரை ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன். தனது பணியியில் உடனடியாக சேர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடடுள்ளது.

யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர் கண்ணன் கோபிநாதன். இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அரகே புத்தம் பள்ளியைச் சேர்ந்தவர் ஆவார்.

IAS officer Kannan Gopinathan, asked to resume duty and continue to work till his resignation is accepted

கடந்த ஆண்டு கேரளா வெள்ளத்தின் போது தனது ஐஏஎஸ் என்ற அடையாளத்தை மறைத்து செங்கண்ணூரில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். சுமார் 8 நாள்கள் வெள்ளம் நிவாரண பொருட்களை பிரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.

அவர் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் கூறும் போதுல், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வேலைக்கு வந்த நிலையில், என் குரலுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் ராஜினாமா செய்ய செய்தேன் என்றார். அத்துடன் காஷ்மீர் விவாகரம் காரணமாகவும் அவர் ராஜினாமா செய்ததாக அப்போது கூறப்பட்டது.

ஒரு பயணியை.. சுற்றி சூழ்ந்து.. சரமாரியாக தாக்கிய அரசு டிரைவர், கண்டக்டர்கள்.. திண்டுக்கல்லில் ஷாக்!ஒரு பயணியை.. சுற்றி சூழ்ந்து.. சரமாரியாக தாக்கிய அரசு டிரைவர், கண்டக்டர்கள்.. திண்டுக்கல்லில் ஷாக்!

இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்த பின்னர் கண்ணன் கோபிநாத் தன் வசித்த அரசு குடியிருப்பை விட்டு வெளியேறிவிட்டார். இந்நிலையில் அவர் வசித்த குடியிருப்புக்கு, உங்கள் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் வரை உங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று கடந்த 27ம் தேதி மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

English summary
IAS officer Kannan Gopinathan, who resigned last week 'Freedom of Expression' Asked to Join Duty Immediately
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X