டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டினா டாபி ஐஏஎஸ் அதிர்ச்சி.. போலியான பேஸ்புக் பக்கத்தில் குடியுரிமை சட்டம் குறித்து கடும் தாக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை ஐஏஎஸ் அதிகாரி டினா டாபி கடுமையாக விமர்சித்து எழுதியது போன்று பேஸ்புக்கில் ஒரு பதிவு வைரலாகியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் அப்படி எழுதவில்லை என்றும் என் பெயரில் போலியான பேஸ்புக் பேஜ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி, 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த இஸ்லாமியர் நீங்கலாக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்த சட்டம் இந்திய குடியுரிமையை வழங்குகிறது.

38 வயது பெண்ணுக்கு 17வது முறையாக பிரசவம்.. சுகாதாரத்துறை அதிர்ச்சி38 வயது பெண்ணுக்கு 17வது முறையாக பிரசவம்.. சுகாதாரத்துறை அதிர்ச்சி

நாடு முழுவதும்

நாடு முழுவதும்

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வலுபெற்று வருகிறது. மாணவர்கள் கல்லூரி வளாகங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டினா டாபி

டினா டாபி

இந்த சட்டத்தை எதிர்த்து ஐஏஎஸ் அதிகாரி டினா டாபி பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து இந்தி செய்தி ஒன்று வைரலாகியது. பழங்குடி இனத்தவரான டினா டாபி 2015ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் நம்பர் 1 இடத்தை பெற்றவர் ஆவார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.

டினா டாபி விளக்கம்

டினா டாபி விளக்கம்

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவன செய்தியாளர் அவரிடம் கருத்து கேட்க முயன்றார். அப்போதுதான் ஐஏஎஸ் அதிகாரி டினா டாபி தனது பெயரில் போலியான பேஸ்புக் பக்கம் செயல்படுவதை அறிந்திருக்கிறார்.

 தவறான தகவல்

தவறான தகவல்

தனது பெயரில் செயல்படும் போலியான பேஸ்புக் பக்கத்தில் தவறாக கருத்துக்களை பதிவிட்டு உள்ளதாகவும் இதுபற்றி தான் போலீசில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
'IAS Teena Dabi' fake facebook page criticised the Citizenship law . she will file a police complaint about a fake page
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X