டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா சிகிச்சையிலிருந்து ஐவர்மெக்டின், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகள் நீக்கம்: ஐசிஎம்ஆர்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த ஹைட்ரோகுளோரோகுயின், ஐவர்மெக்டின் மருந்துகளை இனிமேல் பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் அமைப்பின் தேசிய மருத்துவக் குழு அறிவித்துள்ளது.

வயதுவந்தோருக்கான கொரோனா சிகிச்சைக்கான திருத்தப்பட்ட பரிந்துரையில் இந்த அறிவிப்பை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா நோயாளிகளின் உடல்நிலையைப் பொறுத்து, மருத்துவரின் ஆலோசனைப்படி ரெம்டெசிவிர், டோசிலிஜுமாப் மருந்துகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

icmr drops Ivermectin and Hydrochlorothiazide from Corona Treatment

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் நோயளிகள் உயிரிழப்பு அதிகமாகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அதேநேரம், உயிரிழப்பிலிருந்து தப்பிப்போர் குறைவாக இருக்கிறது. எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்துவதால், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து கைவிடப்படுகிறது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள், மல்ட்டிவி்ட்டமின் போன்றவற்றை எடுக்கலாம், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், அல்லது அதிக காய்ச்சல் இருந்தால், தீவிரமான இருமல் போன்றவை 5 நாட்களுக்கு மேல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இதற்கு முன் ரெம்டெசிவிர் மருந்துகள் சில தீவிரமான கொரோனா நோயாளிகள், பாதிப்பு அதிகம் இருக்கும் நோயாளிகள், ஆக்சிஜன் தேவையிருக்கும் நோயாளிகள் ஆகியோருக்கு அறிகுறிகள் கண்டறியப்பட்ட 10 நாட்களுக்குள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
டோசிலிஜுமாப் மருந்து, ஐசியு சிகிச்சையில் நோயாளிகள் இருக்கும்போது,நோயின் தீவிரம் அதிகமாகும்போது 24 மணிநேரம் முதல் 48 மணிநேரத்துக்குள் வழங்க வேண்டும்.

கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் அளவு 92 முதல் 96சதவீதம் இருப்பவர்களுக்கு, மெத்தில்பிரெட்னிலோன் ஊசியும், ஆன்டிகாகுலேஷன் மருந்தும் வழங்கலாம். கொரோனா நோய் தொற்று தீவிரமாக இருந்து, சுவாசிக்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை அதிகப்படுத்த என்ஐவி மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கலாம்.

60வயதுக்கு மேற்பட்டவர்கள் நுரையீரல் நோய் இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், சிஏடி நோய் இருப்பவர்கள், நீரிழிவு நோய் இருப்போர், நுரையீரல் நோய், சிறுநீரகம், கல்லீர்ல் நோய் இருப்போர், பெருமூளைரத்த குழாய் நோய் இருப்போர், உடல்பருமன் போன்ற குறைபாடுகள் இருப்போரிடையே கரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது என ஐசிஎம் ஆர் தெரிவித்துள்ளது.

English summary
The National Task Force on Covid 19 has dropped Ivermectin and Hydroxychloroquine from the clinical guidance for management of adult Covid-19 patients, according to Government sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X