டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளைஞர்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதால்தான்.. கொரோனா வேகமாக பரவுகிறது.. ஐசிஎம்ஆர் புது விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: இளைஞர்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதாலும் தற்போது பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகவும் இந்தியாவில் இளைஞர்கள் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Pandemic ஆக இருக்கும் Coronavirus.. Endemic தொற்றாக மாறலாம்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.

    நம்மவர் கூட்டம் இருக்கும் வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது - கமல்ஹாசன் கடிதம் நம்மவர் கூட்டம் இருக்கும் வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது - கமல்ஹாசன் கடிதம்

    இதன் காரணமாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், வைரஸ் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

    பெரிய மாற்றமில்லை

    பெரிய மாற்றமில்லை

    இந்நிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வருவதன் காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் எனப்படும் ஐசிஎம்ஆர் தற்போது விளக்கமளித்துள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆரின் இயக்குநர் பால்ராம் பார்கவா, கொரோனா பரவலின் 2ஆம் அலை பற்றிய தரவுகளை முதல் அலையுடன் ஒப்பிடுகையில் வயது வாரியாக பார்க்கும்போது வைரஸ் பாதிப்பில் பெரியளவில் மாற்றமில்லை.

    வெளியே சுற்றுகின்றனர்

    வெளியே சுற்றுகின்றனர்

    இப்போதும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களே கொரோனா காரணமாக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டாம் அலையில் இளைஞர்கள் மத்தியிலும் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இளைஞர்கள் தேவையின்றி அதிகம் வெளியே செல்ல தொடங்கியுள்ளனர். மேலும். தற்போது நாட்டில் சில புதிய உருமாறிய கொரோனா வகைகளும் கண்டறியப்படுகிறது. இந்த இரண்டும் தான் இளைஞர்கள் மத்தியில் கொரோனா வேகமாக பரவ காரணம் என்றார்.

    16 மாநிலங்களில் அதிகமாகும் கொரோனா

    16 மாநிலங்களில் அதிகமாகும் கொரோனா

    இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் மிக மிக மோசமாக உள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா. பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஊரடங்கு அல்லது 144 தடை போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக நாட்டிலுள்ள 18 மாநிலங்களில் வைரஸ் பரவல் குறையத் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். இந்தியாவில் கடந்த 14 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3.48 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொரோனாவால் ஒரே நாளில் 4.205 பேர் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    ICMR's latest statement on Coronavirus spread among young people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X