டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவுக்கு மத்தியில் புதிய கேட் க்யூ வைரஸ் இந்தியாவில் பரவல் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் புதிதாக கேட் க்யூ வைரஸ் பரவி வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் மூன்றரை கோடி பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 60 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவில் இருந்து புதிதாக கேட் க்யூ வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது.

மேட் இன் சீனா என்று பொருட்களை சொல்வார்கள் கொரோனா நோய் மேட் இன் சீனாதான். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ்க்கு எதிராக இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் புதிய வகை வைரஸ் கிருமியான கேட் க்யூ (CQV) பரவ வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

சீனாவில் புதிய வைரஸ்

சீனாவில் புதிய வைரஸ்

இந்த கேட் க்யூ வைரஸ் ஏற்கனவே சீனாவில் பலருக்கு தொற்றியுள்ளது. இந்த வைரஸ்கள் பொதுவாக குலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகள் மூலம் பரவுகின்றன, மேலும் இது இந்தியாவில் மனிதர்களுக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடும். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், மூளைக்காய்ச்சல், மூளையை பாதிக்கும் என்செபாலிடிஸ் போன்ற நோய்களை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசுக்கள் பன்றிகளில் வைரஸ்

கொசுக்கள் பன்றிகளில் வைரஸ்

குலெக்ஸ் வகை கொசுக்களில், மற்றும் சீனா மற்றும் வியட்நாமில் உள்ள பன்றிகளிலும் கேட் கியூ வைரஸ் இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது.

தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்

தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்

புனேவின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (NIV) விஞ்ஞானிகள் 883 மனித சீரம் மாதிரிகளில் இரண்டில் இந்த வைரசிற்கான ஆன்டிபாடிகளை கண்டுபிடித்ததை அடுத்து இந்த நோய் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.
CQV ஆன்டிபாடிகளுக்கு நேர்மறையை சோதித்த இரண்டு மாதிரிகள் கர்நாடகாவிலிருந்து 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வந்தன.

நோயெதிர்ப்பு சக்திகள்

நோயெதிர்ப்பு சக்திகள்

ஒரு வைரஸ் உடலைத் தாக்கும்போது மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் ஆன்டிபாடிகள் உருவாகின்றன.
இந்த இரண்டு நபர்களும் ஒரு கட்டத்தில் கேட் கியூ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ஆய்வின் போது எந்தவொரு மனித அல்லது விலங்கு மாதிரிகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்படவில்லை.

ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவுகள்

ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவுகள்

இந்தியாவில் குலெக்ஸ் கொசுக்களின் ஒத்த இனங்கள் பரவுவதால், கொசு மாதிரிகளில் இந்த வைரஸின் பிரதி இயக்கவியலைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய கொசுக்கள் கேட் க்யூ வைரசுக்கு ஆளாகின்றன என்று தரவு காட்டுகிறது என்று ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆய்வின் முடிவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழின் IJMR சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டன.

எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்

எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்

ஐசிஎம்ஆர் ஆய்வின்படி, இந்திய கொசுக்கள் CQV க்கு ஆளாகின்றன, இது பொதுவான நோய்க்கிருமியாகவும் மாறக்கூடும். உள்நாட்டு பன்றிகள் CQV இன் முதன்மை பாலூட்டிகள் மற்றும் CQV எதிர்ப்பு ஆன்டிபாடிகள் சீனாவில் உள்நாட்டில் வளர்க்கப்படும் பன்றிகளில் பதிவாகியுள்ளன. கொரோனா பற்றிய அச்சமே உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் புது புது வைரஸ்கள் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Cat Que Virus in China Latest News in Tamil: The COVID-19 pandemic the Indian Council of Medical Research scientists have found another virus the Cat Que Virus reported mainly in China. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் புதிதாக கேட் க்யூ வைரஸ் பரவி வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) எச்சரித்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X