டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய கட்சி அங்கீகாரம் பெற்றது ஆம் ஆத்மி.. பத்தே ஆண்டுகளில் அசுர வளர்ச்சி.. இனி மோடி vs கெஜ்ரிவால்?

Google Oneindia Tamil News

டெல்லி : ஆம் ஆத்மி கட்சி, குஜராத்தில் தற்போது 5 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்யவிருக்கும் நிலையில், 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி, தேசியக் கட்சியாகிவிட்டது என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற ஆம் ஆத்மி கட்சி, இன்னும் ஒரு மாநிலத்தில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்று, 6 சதவீத வாக்குகளைப் பெற்றாலே தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது

இந்நிலையில், தேசியக் கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. குறைவான இடங்களையே பெற்றாலும், 'தேசியக் கட்சி' அந்தஸ்தை தனதாக்கியுள்ளது ஆம் ஆத்மி.

டெல்லி மாநகராட்சி மேஜிக் குஜராத்தில் நடக்குமா? ஓட்டை பிரிச்சி! பாஜகவுக்கு உதவுகிறதா ஆம் ஆத்மி? டெல்லி மாநகராட்சி மேஜிக் குஜராத்தில் நடக்குமா? ஓட்டை பிரிச்சி! பாஜகவுக்கு உதவுகிறதா ஆம் ஆத்மி?

தேசியக் கட்சி அந்தஸ்து

தேசியக் கட்சி அந்தஸ்து

ஓர் அரசியல் கட்சி, தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற, குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில், மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கு அக்கட்சி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தது இரண்டு இடங்களையும் 6 சதவீத வாக்குகளையும் பெற வேண்டும். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 7 அரசியல் கட்சிகள் 'தேசியக் கட்சி' என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

2 மாநிலங்களில் ஆட்சி

2 மாநிலங்களில் ஆட்சி

2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தற்போது 2 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. எனினும், அக்கட்சிக்கு தேசியக் கட்சி எனும் அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அந்த 2 மாநிலங்களிலும் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அதேபோல, கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் கோவாவில் கடுமையாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி அங்கு 2 எம்.எல்.ஏ சீட்களை வென்றது. அதோடு, 6.8% வாக்குகளையும் பெற்றது.

3 மாநிலங்களில் அங்கீகாரம்

3 மாநிலங்களில் அங்கீகாரம்

அதன் மூலம், கோவாவில் மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றது ஆம் ஆத்மி கட்சி. அதன் மூலம் தங்களது சின்னமான 'துடைப்பம்' சின்னத்தை தக்கவைத்துக் கொண்டது ஆம் ஆத்மி. இப்படியாக 3 மாநிலங்களில் மாநிலக் கட்சி அங்கீகாரத்தோடு 'துடைப்பம்' சின்னத்தைக் கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி, தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற இன்னும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் 2 சீட்களையும், 6%க்கும் அதிகமான வாக்குகளையும் பெற வேண்டும்.

 தடம் பதிக்க

தடம் பதிக்க

இந்நிலையில் தான், டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து, வெற்றித் தடத்தைப் பதிக்கும் நோக்கத்தோடு குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களில் தீவிரமாகக் களமிறங்கியது ஆம் ஆத்மி. இமாச்சல பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி, வேட்பாளர்களை நிறுத்தி இருந்தாலும், குஜராத்தைத்தான் அக்கட்சி பெரிதும் எதிர்பார்க்கிறது.

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் சரிவை ஈடு கட்ட முயற்சித்து வருகிறது ஆம் ஆத்மி கட்சி. குஜராத் தேர்தலில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 2 எம்.எல்.ஏ தொகுதிகளை வென்று, மாநிலம் முழுவதும் 6 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால் ஆம் ஆத்மி நான்காவது மாநிலத்தில் மாநிலக் கட்சியாக அந்தஸ்து பெறும். அப்படி நடந்தால், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி தேசியக் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்படும்.

தேசியக் கட்சி

தேசியக் கட்சி

2024 லோக்சபா தேர்தலுக்குள், ஆம் ஆத்மி கட்சி, தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற்றால், லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கூடுதல் கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தும் ஆம் ஆத்மி, தேசியக் கட்சி அங்கீகாரத்தோடு களமிறங்கினால் இன்னும் கூடுதல் கவனம் பெறும் என்பதால், இன்றைய தேர்தல் முடிவை பெரும் எதிர்பார்ப்புகளோடு உற்று நோக்கி வருகிறது.

தவிடுபொடியாக்கி

தவிடுபொடியாக்கி

ஒட்டுமொத்தமாக ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களை வாரிச் சுருட்டியுள்ளது. தலைநகரின் உள்ளாட்சி அமைப்பில் பாஜக, காங்கிரஸ் ஆகிய பழம்பெரும் கட்சிகளை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது பத்து ஆண்டுகளே ஆன இளம் 'ஆம் ஆத்மி'. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஆம் ஆத்மி - பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தில் 5 சீட்

குஜராத்தில் 5 சீட்

இன்று வெளியாகியுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 2 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி அறிவிப்பு வெளியாகிவிட்டது. மேலும், மாநிலம் முழுவதும் ஆம் ஆத்மி கட்சி 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பதிவான வாக்குகளில் 6 சதவீதத்தை விட அதிகம்.

தேசியக் கட்சியானது ஆம் ஆத்மி

தேசியக் கட்சியானது ஆம் ஆத்மி

எனவே, நான்காவது மாநிலமாக குஜராத்திலும், மாநிலக்கட்சி அங்கீகாரத்தைப் பெறுகிறது ஆம் ஆத்மி. நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெறுவதன் மூலம் தேசியக் கட்சி அங்கீகாரத்தையும் பெறுகிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதன் மூலம், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது ஆம் ஆத்மி.

வேகமாக வளரும் கட்சி

வேகமாக வளரும் கட்சி

தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி தேசியக் கட்சியாக மாறியுள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததால் அது தேசிய கட்சியாக மாறியுள்ளது. குஜராத்தில் மக்கள் இதுவரை ஆம் ஆத்மி கட்சிக்கு 40 லட்சம் வாக்குகளை அளித்து ஆம் ஆத்மி கட்சியை தேசியக் கட்சியாக மாற்றியுள்ளனர், இந்தியாவிலேயே வேகமாக வளரும் கட்சியாக உருவெடுத்துள்ளது என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

சிசோடியா ட்வீட்

சிசோடியா ட்வீட்

ஆம் ஆத்மி குஜராத்தில் கணக்கைத் தொடங்க இருக்கும் நிலையில், "குஜராத் மக்களின் வாக்குகளால் ஆம் ஆத்மி கட்சி இன்று தேசிய கட்சியாக மாறி வருகிறது. முதன்முறையாக கல்வி, சுகாதாரம் சார்ந்த அரசியலுக்கு நாட்டில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய மக்களுக்கு வாழ்த்துகள்" என டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மனீஷ் சிசோடியா ட்வீட் செய்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

"குஜராத் தேர்தல் முடிவுகள் மூலம் இன்று ஆம் ஆத்மி கட்சி தேசியக் கட்சியாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சியாக இருந்தது, தற்போது 2 மாநிலங்களில் ஆட்சி அமைத்து தேசிய கட்சியாக மாறியுள்ளது, குஜராத்தில், நேர்மறையான பிரச்சாரம் மூலம் ஆம் ஆத்மி கட்சி 40 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது." எனத் தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

9வது தேசியக் கட்சி

9வது தேசியக் கட்சி

ஆம் ஆத்மி, 2 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து 4 மாநிலங்களில் அங்கீகாரம் பெற்று 'துடைப்பம்' சின்னத்தைத் தக்கவைத்து தேசியக் கட்சியாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி ஆகிய 8 கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பட்டியலில் ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது.

2024 குறி

2024 குறி

ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு வரும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தேசியக் கட்சி அங்கீகாரம் மூலம் இன்னும் பரவலாகக் கவனம் பெறும். வரும் 2024 லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிரான முகமாக அரவிந்த் கெஜ்ரிவாலை முன்வைப்பதற்கு, ஆம் ஆத்மிக்கு இந்த அந்தஸ்து பயன்படும். இனி, அக்கட்சி நாடு முழுவதும் தீவிரமாக வேலையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Aam Aadmi Party needs to win just two seats and secure 6 percent of votes in today's counting to get national party status.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X