டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் அமைச்சர்வையில் அமித் ஷா இடம் பெற்றால்... பாஜவின் புதிய தலைவர் யார்?

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித் ஷா அமைச்சரானால் ... பாஜவின் புதிய தலைவர் யார்?

    டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இடம் பெற்றால் அவருக்கு பதில் யார் பாஜக தலைவராகக்கூடும் என்பது தொடர்பாக தேசிய ஊடகங்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளன . இதன்படி ஜேபி நட்டா அல்லது தர்மேந்திர பிராதன் ஆகியோரில் ஒருவர் பாஜக தலைவர் பொறுப்புக்கு வரலாம் என்கிறார்கள்.

    நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, லோக்சபா தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

    மோடியின் புதிய அமைச்சரவையில் அமித்ஷா இடம்பெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பாஜக தேசிய தலைவரான அமித்ஷா 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காந்தி நகர் தொகுதியில் வென்றுள்ளார்.

    நிதியமைச்சராக அமித்ஷா

    நிதியமைச்சராக அமித்ஷா

    தனது லட்சியத்தை இரண்டாவது முறையாக சக்சஸ்புல்லாக நிறைவேற்றிய அமித் ஷாவை மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்க பிரதமர் மோடி விரும்புகிறாராம். இதனிடையே நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெட்லி ஓய்வை விரும்பினால், அவருக்கு பதில் அமித் ஷா நிதியமைச்சராக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். .

    தர்மேந்திர பிரதான்

    தர்மேந்திர பிரதான்

    ஒருவேளை அப்படி அமித் ஷா மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றால் பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டியது வரும். ஏனெனில் பாஜகவின் விதிப்படி அமைச்சர்களாக இருப்பவர்கள் பாஜக தலைவர் பொறுப்பில் இருக்க முடியாது. எனவே அமித் ஷா அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக பதவியை ராஜினாமா செய்தால், அவருக்கு பதிலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஜேபி நட்டா மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் ஆகியோர் ரேஸில் உள்ளதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

    உ.பியில் நட்டா அசத்தல்

    உ.பியில் நட்டா அசத்தல்

    பாஜக தேசிய பொதுச்செயலாளராகவும், ஹிமாச்சல் பிரதேச ராஜ்யசாபா எம்பியாகவும் உள்ளார். பாஜகவில் ஜேபி நட்டா மாஸ்டர் மைண்ட் ஆக போற்றப்படுகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 80 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு காரணமாக ஜேபி நட்டா பார்க்கப்படுகிறார்.

    தர்மேந்திரா கடும் உழைப்பு

    தர்மேந்திரா கடும் உழைப்பு

    தர்மேந்திர பிரதான் கடந்த முறை பீகாரில் தேர்தல் வேலை பார்த்து அசத்தியவர், இந்த முறை ஒடிசாவில் சூப்பராக பணியாற்றி உள்ளார். ஒடிசாவில் 2014ம் ஆண்டு 21.9 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதத்தை இந்த முறை 38.7 சதவீதமாக உயர்த்தி உள்ளார். ஒடிசாவில் ஆளும் பிஜேடி கட்சியின் வாக்கு சதவீதம் 44.1 சதவீதத்தில் இருந்து 42.76 ஆக குறைந்துள்ளது. சட்டசபை தேர்தலிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் 18.2 சதவீதத்தில் இருந்து 32,5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    மோடிக்கு நெருக்கமானவர்

    மோடிக்கு நெருக்கமானவர்

    ஆர்எஸ்எஸ் மாணவரான தர்மேந்திர பிரதான் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். எனவே அவரே பாஜகவின் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக டெல்லி பாஜக வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

    English summary
    if Amit Shah gets a Cabinet birth? who may replace as BJP president, JP Nadda and Dharmendra Pradhan are race
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X