டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்

    டெல்லி: மகாராஷ்டிராவில் 6 மாதம் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரும் 2 வாரங்களுக்கும் மேலாக எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரைத்தார்.

    if any party proves majority Presidents Rule to be withdrawan, says MHA

    இதனையடுத்து மகாராஷ்டிராவில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிராவில் ஆட்சியை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் அதற்கான சாத்தியங்கள் தற்போது இல்லை எனவும் ஜனாதிபதியிடம் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி ஆட்சி 6 மாதங்கள் அமலில் இருக்கும்.

    அதேநேரத்தில் மகாராஷ்டிரா சட்டசபையில் எந்த கட்சியேனும் பெரும்பான்மையை நிரூபிக்க முன்வந்தால் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    he Ministry of Home Affairs said that The President's Rule can be withdrawn if any party can prove majority.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X