டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால் பாஜகவுக்கு ஷாக்... வென்ற 32 இடங்கள் பறிபோகும்.. 'பரபர' சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் பாஜக வெற்றி பெற்ற இடங்களில் 32 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று மூட் ஆப் நேஷன் சர்வே தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே குழுமம்- கார்வி இன்சைட்ஸ் இணைந்து நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்ட முடிவுகள் விவரம்:

If Lok Sabha election were held today BJP would lose 32 seats: MOTN Survey

2019 மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பெற்றது. தற்போதைய சூழ்நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெற்றால் பாஜகவுக்கு 271 இடங்கள்தான் கிடைக்கும். பெரும்பான்மைக்கு ஒரு இடம் தேவை என்கிற நிலை பாஜகவுக்கு ஏற்படும்.

அதேநேரத்தில் லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 8 இடங்கள் கிடைக்கும். சிவசேனா விலகல், நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் ஆகியவற்றால் ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே வென்ற இடங்களில் 50 தொகுதிகளை இழக்கும்.

இருப்பினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 303 இடங்களைப் பெறும். அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மொத்தமாக 15 லோக்சபா தொகுதிகளைக் கூடுதலாக பெறும்.

ஹிட்லரிடமே தப்பியவர்.. சர்வதேச அரங்கில் மோடிக்கு எதிராக எழுந்த குரல்.. கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ்!ஹிட்லரிடமே தப்பியவர்.. சர்வதேச அரங்கில் மோடிக்கு எதிராக எழுந்த குரல்.. கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ்!

2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் என்பது 4% குறையக் கூடும். ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 2% அதிகரிக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சிவசேனா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான பெரும்பானை பலம் கடுமையாக பாதிக்கப்படும்.

இவ்வாறு மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to the MOTN Survey, If Lok Sabha election were held today BJP would lose 32 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X