டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? உச்சநீதிமன்றம் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    Salem 8 Way Project : 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா?- வீடியோ

    டெல்லி: 8 வழிச்சாலை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த எதிர்ப்பு இருப்பதால் வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

    சேலம்- சென்னை இடையே காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலத்திற்கு புதிய 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நிலத்தை அளவெடுக்கும் பணி கடந்த ஆண்டு நடந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கோரி, பல்வேறு போராட்டங்களை விவசாயிகளும், பொதுமக்களும் நடத்தி வருகிறார்கள்.

    8 வழிச்சாலை திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் வரும்.. அடித்து சொல்லும் சேலம் பாலாஜி ஹாசன் 8 வழிச்சாலை திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் வரும்.. அடித்து சொல்லும் சேலம் பாலாஜி ஹாசன்

    8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு

    8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு

    இந்நிலையில பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 8வழிச்சாலை திட்டத்துக்காக அழிக்கப்படுவதாக கூறி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வழக்கு வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் திமுக, பாமக, நாம்தமிழர் இயக்கத்தினரும் வழக்கு தொடர்ந்தனர்.

    ஐகோர்ட் தடை

    ஐகோர்ட் தடை

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு பொதுமக்களிடம் கருத்துகேட்பு நடத்த வில்லை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என் றுகூறி திட்டத்தை செயல்படுத்த தடை விதித்ததோடு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்தது. பறிமுதல் செய்த நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

    தமிழக அரசு முறையீடு

    தமிழக அரசு முறையீடு

    இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் கடந்த மார்ச் 31ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 8வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

    மத்திய அரசு உறுதி

    மத்திய அரசு உறுதி

    தொடர்ந்து செனனை -சேலம் எட்டுவழிச்சாலை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை31ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே சுற்றுச்சூழல் அனுமதி பெறால் 8வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    supreme court said that if tamil nadu opposes 8 way road plan can be implemented in other states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X