டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரஸ் மீட்டில் மோடி அமைதியாக இருந்ததற்கு காரணம் இருக்கிறது... ப.சிதம்பரம் சொல்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி

    டெல்லி: தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாதகமானால் அமித்ஷாவை காரணம் காட்டவே மோடி செய்தியாளர்களை சந்தித்தார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

    7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் இன்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
    தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரங்களும் இன்றுடன் முடிந்தது. ஆட்சியை பிடிப்பது யார் என்று மே 23ஆம் தேதி தெரிந்துவிடும்.

    இந்தநிலையில், பிரச்சாரம் முடிந்த கையோடு, டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். கடந்த 5 ஆண்டுகளில், முதல்முறை மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார்.

    அமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி! அமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி!

    அமித் ஷா மட்டும் பேசினார்

    அமித் ஷா மட்டும் பேசினார்

    இந்த சந்திப்பில், அனைத்து கேள்விகளுக்கும் வரிசையாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதில் அளித்து வந்தார். செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியும் பதிலளிக்க மறுத்த பிரதமர் மோடி, சந்திப்பு முழுக்க கன்னத்தில் கை வைத்து அமைதியாக அமர்ந்து இருந்தார். அமித் ஷா மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார்.

    அர்த்தம் இருக்கிறது

    அர்த்தம் இருக்கிறது

    இந்தநிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து ட்வீட்டரில் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது என்ற கூற்றின் சாட்சி பிரதமர் மோடியின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு என்றும் அவரின் அமைதி ஒரு செய்தியை சொல்வதாகவும் கூறியுள்ளார்.

    காரணம் காட்டவே

    மேலும், தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாதகமானால் அமித்ஷாவை காரணம் காட்டவே மோடி செய்தியாளர்களை சந்தித்தார் என்றும், டெல்லியில் பிரதமர் மோடி, அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு பற்றி ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

    ராகுல் விமர்சனம்

    ராகுல் விமர்சனம்

    இதே போல், மோடி ஜி வாழ்த்துக்கள். சிறந்த செய்தியாளர்கள் சந்திப்பு என்றும், அரை யுத்தத்தை காட்டுகிறது. அடுத்த முறை திரு. ஷா அவர்கள், உங்களை (மோடி) ஜோடி கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதிக்கட்டும். நல்லது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

    English summary
    I think PM was present at the press conference to send the message that, if the election results go wrong, the person to take the blame will be Mr Amit Shah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X