• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தேர்தல் நியாயமாக நடந்தால் பாஜக 40 தொகுதிகளைக்கூட தாண்டாது.. மோடிக்கு பாஜக சீனியர் தலைவர் கடிதம்

|

டெல்லி: லோக்சபா தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது என்று பாஜக மூத்த தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அஜய் அகர்வால் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார். அத்வானி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படவேண்டும் என நாடே எதிர்பார்த்த நிலையில் ராம் நாத் கோவிந்தை குடியரசு தலைவர் வேட்பாளாராக பாஜக தலைமை அறிவித்தது. அதன் பின்னணியில் குஜராத் தேர்தல் இருந்தது என்று கூறியுள்ள அகர்வால், குஜராத்தில் பாஜக படுதோல்வி அடையும் என்ற நிலை இருந்தபோது ராம்நாத்தை குடியரசுத் தலைவராக்கி கோலி சமுதாய வாக்குகளை அறுவடை செய்தது பாஜக.

 If there are free elections, BJP will not win more than 40 Seats: Ajay Agrawal

அதோடு, குஜராத் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற தான்தான் காரணம் என குறிப்பிட்டுள்ள அஜய் அகர்வால், குஜராத் தேர்தலின்போது ஜங்க்புராவில் மணி சங்கர் அய்யர் வீட்டில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானிய அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற்றது என்பதை கூறியது நான்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை குறிப்பிட்டு தேசப் பாதுகாப்பு குறித்தும் பிரச்சார மேடைகளில் மோடி பேசி வந்தார். இதன் காரணமாகவே குஜராத்தில் படு தோல்வியடைய இருந்த பாஜக அங்கு வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார். இந்த விவரங்களை அஜய் வெளியிட்டதால்தான் குஜராத்தில் பாஜக வென்றதாக ஆர்எஸ்எஸ்எஸ் அமைப்பு ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு ஆதாரமாக தன்னுடன் ஆர்எஸ்எஸ்எஸ் தலைவர் தத்தத்ரேயா ஹோசபலே பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளதாகவும் அஜய் குறிப்பிட்டுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி!

இதையெல்லாம் கூறிய அஜய், மோடியை ஒரு நன்றி கெட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலை பொறுத்தளவில் நியாயமாக நடைபெற்றால் பாஜக வெறும் 40 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றிபெறும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மோடியை தனக்கு 28 ஆண்டுகளாக தெரியும் என்று குறிப்பிட்டவர், அவருடன் பாஜக அலுவலகத்தில் ஒன்றாக அமர்ந்து பலமுறை உணவு உண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் பண மதிப்பிழப்பு குறித்து குறிப்பிட்டுள்ள அஜய் குறைந்தது 5 லட்சம் கோடிகளாவது திரும்பி வராது என்று நீங்கள் (மோடி ) எதிர்பார்த்தீர்கள் ஆனால் 99 % பணம் திரும்பி வந்துவிட்டது. அதில் பெருமளவு கள்ள நோட்டுகளும் இருந்தன. அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிலேயே நீங்கள்தான்(மோடி) புத்திசாலி அதனால்தான் யாரையும் கலந்தாலோசிக்காமல் அரசையும் தயார் நிலையில் வைக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தீர்கள் என்றும் எந்த கட்சிப் பணியாளர்களை மோடி மதிப்பதில்லை என்றும் கடுமையாக அந்த கடிதத்தில் அஜய் அகர்வால் கூறியுள்ளார். இந்த கடிதம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

புதுடெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வாக்காளர்கள்
Electors
14,90,147
 • ஆண்கள்
  8,30,322
  ஆண்கள்
 • பெண்கள்
  6,59,825
  பெண்கள்
 • மூன்றாம் பாலினத்தவர்
  N/A
  மூன்றாம் பாலினத்தவர்

 
 
 
English summary
Supreme Court advocate Ajay Agrawal, the BJP leader who contested against Congress’s Sonia Gandhi from Rae Bareli in 2014, has written a letter to Prime Minister Narendra Modi making certain serious allegations against him.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Loksabha Results

PartyLWT
BJP+3390339
CONG+88088
OTH1090109

Arunachal Pradesh

PartyLWT
BJP12012
CONG000
OTH303

Sikkim

PartyLWT
SDF606
SKM505
OTH000

Odisha

PartyLWT
BJD70070
BJP21021
OTH707

Andhra Pradesh

PartyLWT
YSRCP1450145
TDP28028
OTH101

-

Loksabha Results

PartyLWT
BJP+3390339
CONG+88088
OTH1090109

Arunachal Pradesh

PartyLWT
BJP12012
CONG000
OTH303

Sikkim

PartyLWT
SDF606
SKM505
OTH000

Odisha

PartyLWT
BJD70070
BJP21021
OTH707

Andhra Pradesh

PartyLWT
YSRCP1450145
TDP28028
OTH101

-
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more