டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐஐடிகள் முதல் நவோதயா பள்ளிகள் வரை.. கல்வி நிறுவனங்களிடமிருந்து பல கோடி நிதி பெற்ற 'பிரதமர் கேர்ஸ்'

Google Oneindia Tamil News

டெல்லி: ஐஐடிக்கள், ஐஐஎம்கள், நவோதயா பள்ளிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் என பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து, பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பல ஊழியர்கள் தங்கள் சம்பளப் பணத்திலிருந்து நிதி வழங்கியுள்ளனர்.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ், கல்வி நிறுவனங்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சேகரித்த தகவல்களில் இது தெரியவந்துள்ளது.

பிரதமரின் அவசர கால நிவாரண நிதி (பி.எம். CARES) தங்களுக்கு வந்த நிதி ஆதாரம் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிவிக்க முடியாது என மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் கல்வி நிறுவனங்கள் வாயிலாக தரவுகள் கிடைத்துள்ளன.

CBSE பாடத்திட்ட தயாரிப்பு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்... படிப்பில் விஷமத்தனம் வேண்டாம் -தமிழக காங்கிரஸ்CBSE பாடத்திட்ட தயாரிப்பு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்... படிப்பில் விஷமத்தனம் வேண்டாம் -தமிழக காங்கிரஸ்

பிரதமர் நிவாரண நிதி

பிரதமர் நிவாரண நிதி

கொரோனா பரவலையடுத்து பிரதமர் நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பும் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிதியகம் உருவாக்கப்பட்ட நான்காவது நாளில், மார்ச் 31ம் தேதியன்று ரூ .3,076.62 கோடி நிதி இருந்தது. அதில் ரூ .3,075.85 கோடி "தன்னார்வ பங்களிப்புகள்" என்று பிரதமர் நிதியகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களிடமிருந்தும் நிதி

மாணவர்களிடமிருந்தும் நிதி

ஆனால் "தன்னார்வ பங்களிப்புகள்" என்பதில் பல கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் சம்பளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து கூட நிதி பெறப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தகவல் அறியும் கோரிக்கைகளுக்கு 82 கல்வி நிறுவனங்கள் பதிலளித்துள்ளன. அதிலுள்ள சில முக்கிய தகவல்களை பாருங்கள்.

பள்ளிகள்

பள்ளிகள்

நவோதே வித்யாலயா சமிதி (என்விஎஸ்) ரூ .7.48 கோடி வழங்கியுள்ளது, அதன் தலைமையகத்திலும் எட்டு மண்டல அலுவலகங்களிலும் ஊழியர்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளது. என்.வி.எஸ் கிராமப்புறங்களில் 600 க்கும் மேற்பட்ட நவோதயா பள்ளிகளை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் நிதியாதாரத்தை பாதுகாப்பது அவசியம்.

பல்கலைக்கழகங்கள்

பல்கலைக்கழகங்கள்

11 மத்திய பல்கலைக்கழகங்கள் 3.39 கோடி ரூபாயை வழங்கியுள்ளன. அவற்றில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (ஏ.எம்.யூ) ரூ .1.33 கோடியுடன் முதலிடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பி.எச்.யூ) ரூ .1.14 கோடியுடன் 2வது இடத்தையும் பிடித்துள்ளன. டெல்லியை சேர்ந்த மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் (சி.எஸ்.யூ) ரூ .27.38 லட்சத்தை வழங்கியுள்ளது.

ஐஐடிக்கள்

ஐஐடிக்கள்

20 ஐ.ஐ.டி.கள் ரூ .5.47 கோடி வழங்கியுள்ளன. ஐ.ஐ.டி-கான்பூர் ரூ .47.71 லட்சம் வழங்கியுள்ளது. இதில் ரூ .15 லட்சம் ஓய்வூதியதாரர்களிடமிருந்தும், ரூ .36,800 மாணவர்களிடமிருந்தும், மீதமுள்ளவை ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி-ரூர்க்கி ரூ .59.45 லட்சத்திற்கும் மேலாக வழங்கியுள்ளது. அதில் ரூ .4,226 அலுவலகத்திலும், மீதமுள்ளவை ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்டுள்ளன.

ஐஐஎம்

ஐஐஎம்

ஐ.ஐ.எம். பட்டியலில் கோழிக்கோடு (ரூ. 33.53 லட்சம்) முதலிடத்தில் உள்ளது. ஐ.ஐ.எம்-அகமதாபாத் ரூ 11.59 லட்சத்திற்கும் மேலாக வழங்கியுள்ளது. ஐ.ஐ.எம்-இந்தூர் (ரூ. 6.91 லட்சம்), ஐ.ஐ.எம்-கொல்கத்தா (ரூ. 4.56 லட்சம்) நிதி வழங்கியுள்ளன. ஐ.ஐ.எம்-கோழிக்கோட்டின் "கார்பஸ் நிதியிலிருந்து" ரூ .25 லட்சம் பெறப்பட்டதாம். மீதமுள்ளவை ஊழியர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

கேள்விகள்

கேள்விகள்

முன்னணி அறிவியல் நிறுவனங்களில், ஐ.ஐ.எஸ்.சி-பெங்களூர் ரூ .254.64 லட்சம், ஏழு ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.கள் இணைந்து ரூ .45.79 லட்சம் நன்கொடை அளித்தன. மற்ற முக்கிய நிறுவனங்கள் பட்டியலில், என்.சி.இ.ஆர்.டி ரூ .35.22 லட்சம், ஏ.ஐ.சி.டி.இ ரூ. 13.80 லட்சம் மற்றும் யு.ஜி.சி ரூ .1.41 லட்சம் வழங்கியுள்ளன. தன்னார்வத்தோடு நிதி வழங்கியதாக கல்வி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் கட்டாயப்படுத்தி வசூலிக்காமல் இவ்வளவு நிதி திரட்டப்பட்டிருக்க முடியுமா?. கல்வி நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு நிதி பெறப்பட்டுள்ள நிலையில், வருங்காலத்தில் இவற்றின் நிதி ஆதாரம் எப்படி இருக்கும் என்ற கேள்விகளும் எழுகின்றன.

English summary
A sweeping range of educational institutions, from Navodaya schools for rural students to IITs, IIMs and central universities, have together contributed Rs 21.81 crore to the Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations (PM CARES) fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X