டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி., பீகாரில், ஒரே நாளில் இடி தாக்கி 107 பேர் பலி.. வட கிழக்கு மாநிலங்களுக்கு மழைக்கான ரெட் அலர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரு நாட்கள் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. பீகார் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Thunderstorm Bihar : ஒரே நாளில் இடி தாக்கி 107 பேர் பலி.. வட கிழக்கு மாநிலங்களுக்கு Rain Red Alert

    நாடு முழுக்க பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. அதிலும், குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த இரு தினங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    IMD issued heavy rain alert for Bihar and North East states

    கடந்த 24 மணி நேரத்தில் பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் 83 பேர் இடிதாக்கி கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 24 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இடி தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். ஆக மொத்தம் 24 மணி நேரத்தில் இந்த இரு மாநிலங்களில் மட்டும் 107 உயிரிழப்புகள் நடந்துள்ளன.

    மொத்தம் 12 மாவட்டங்களில் செம மழை இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா.. வானிலை மையம் அறிவிப்புமொத்தம் 12 மாவட்டங்களில் செம மழை இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா.. வானிலை மையம் அறிவிப்பு

    உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அங்கு மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    English summary
    IMD has issued a red alert for Bihar for 25th & 26th of June. Earlier on 22nd June, had also warned about heavy rainfall and thunderstorms in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X