டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம்..புதுவை காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    IMD predicts rain | தமிழகம்..புதுவை காரைக்காலில் கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

    டெல்லி: தமிழகம், புதுச்சேரி, பீகார், உத்தரகாண்ட், ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..

    வானிலை மையம் கணிப்பு

    வானிலை மையம் கணிப்பு

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உத்தரகாண்ட், கிழக்கு மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.

    இந்தியா வானிலை

    இந்தியா வானிலை

    பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள சில இடங்களில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை அமைப்பு கணித்துள்ளது.

    8லட்சம் கனஅடிநீர் வெளியேற்றம்

    8லட்சம் கனஅடிநீர் வெளியேற்றம்

    இதனிடையே ஹரியானா மாநிலம் ஹத்னி குண்ட் பேரேஜில் இருந்து சுமார் 8 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.

    ரயில்வே பாலத்தில் வெள்ளம்

    ரயில்வே பாலத்தில் வெள்ளம்

    பழைய டெல்லி ரயில்வே பாலத்தில் 204.5 மீட்டர் உயரத்திற்கு யமுனை வெள்ளம் பாய்ந்தோடுகிறது. டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மிதமான மழை இன்று பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    IMD predicts heavy rainfall on monday in Tamilnadu, Puducherry & Karaikal, Uttarakhand, East Madhya Pradesh, Chhattisgarh, Jharkhand and Odisha
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X