டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காற்று மாசா?.. சென்னை எங்க இருக்கு?.. டெல்லி எங்க இருக்கு?.. அதெல்லாம் ஏற்படாது!.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியிலிருந்து காற்று மாசு தமிழகத்துக்கு பரவாது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் வடகிழக்கு பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் 8 இடங்களில் மக்கள் சுவாசிக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் முகமூடி அணிந்த படி சாலைகளில் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் டெல்லியிலிருக்கும் காற்று மாசு சென்னை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மூச்சை திணற வைக்கும் காற்று மாசு.. டெல்லியில் வாகன கட்டுப்பாடு இன்று முதல் அமல்மூச்சை திணற வைக்கும் காற்று மாசு.. டெல்லியில் வாகன கட்டுப்பாடு இன்று முதல் அமல்

தர குறியீடு

தர குறியீடு

அடுத்த வாரம் தமிழகத்தில் காற்று மாசு ஏற்படும் என்றும் இதற்கு வடகிழக்கு பருவமழை இடைவெளிதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 200 முதல் 300 வரை காற்று மாசு தர குறியீடு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு வரும்

தமிழகத்துக்கு வரும்

இதை சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநரும், இந்திய வானிலை மைய துணை இயக்குநருமான எஸ் பாலச்சந்திரன் கூறுகையில் டெல்லியில் இருந்து காற்று மாசு தமிழகத்துக்கு வரும் என்பது தவறான தகவல்.

மலை

மலை

அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழகமும் டெல்லியும் வெவ்வேறு அட்சரேகைகளில் இருக்கிறது. தமிழகத்துக்கும் டெல்லிக்கும் இடையே அதிக தூரம் உள்ளன. மேலும் இரண்டுக்கும் இடையே மலைகளும் காணப்படுகின்றன.

வடகிழக்கு பகுதி

வடகிழக்கு பகுதி

கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியிலிருந்து காற்று வீசுவதால் தமிழகத்துக்கு காற்று மாசு ஏற்படாது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் குழப்பம் நீடிக்கிறது.

English summary
Indian Meteorological Department says that there will be no pushing of polluted air towards Tamilnadu as they are in different latitudes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X