டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கொட்ட போகும் மழை.. மும்பைக்கு ரெட் அலர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக மழை பெய்யும் என்பதால் மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

மும்பையில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களாக நகரில் லேசான மழை பெய்து வருகிறது.

நேற்று காலை 24 மணி நேரத்தில் மும்பையில் 3 மி.மீ. மழையும் சாந்தாகுருஸில் 1 மி.மீ.ருக்கும் குறைவான மழையே பதிவாகியிருந்தது.

காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் கட்சிக் கொடிகள்... கே.எஸ்.அழகிரி முன்னெடுக்கும் புதிய திட்டம்காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் கட்சிக் கொடிகள்... கே.எஸ்.அழகிரி முன்னெடுக்கும் புதிய திட்டம்

வெள்ளம் போல் தண்ணீர்

வெள்ளம் போல் தண்ணீர்

இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு, அதாவது 5-ஆம் தேதி வரை மும்பையில் மிகவும் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காற்றழுத்த தாழ்வு நிலை

நாளை காற்றழுத்த தாழ்வு நிலை

அது போல் ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், புணே, சாங்கிலி, ஓஸ்மனாபாத் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும். 5 தினங்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் குஜராத் மற்றும மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு மழை

எவ்வளவு மழை

தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை, தாணேவில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு 6.5 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரமடையும் பருவமழை

தீவிரமடையும் பருவமழை

இந்த வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த பகுதியால் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மும்பைக்கு அதிக மழைப் பொழிவை கொடுக்கும். இதனால் மும்பையில் அடுத்த சில நாட்களில் 100 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரம் தற்போது மற்றொரு இயற்கை இடரை சந்திக்க தயாராகி வருகிறது.

English summary
Indian Meteorological Department issues red alert in Mumbai as new low formed in Bay of Bengal tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X