டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேட்டன், சேச்சிகளை மகிழ்விக்க.. தென்மேற்கு பருவ 'மழை தேவதை'... ஜுன் 6ல் கேரளா வருகிறாள்

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த ஆண்டு கேரள சேட்டன்களிடம் சேட்டையை காட்டிவிட்டு சென்ற தென்மேற்கு பருவ மழை, வழக்கம் போல் ஜுன 1ம் தேதி வராமல், 5 நாட்கள் தாமதமாக ஜுன் 6ம் தேதி கேரளா வருகிறாள். இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிபடுத்தி உள்ளது..

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1ம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் ராஜஸ்தானில் நிறைவு பெறும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கேரளாவில் தாமதமாக துவங்கும் என எதிர்பார்கிறோம். ஜுன் 1ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதி பருவமழை தொடங்கலாம். அதேநேரம் ஜுன் 6ம் தேதிக்கு 4 நாட்கள் முன்பாகவோ, அல்லது பின்பாகவோ கூட மழை ஆரம்பிக்க வாய்ப்பும் இருக்கிறது.

போற இடமெல்லாம் 6 அடின்னு பேசாதீங்க.. கருணாநிதியை களங்கப்படுத்தாதீங்க.. ஸ்டாலினுக்கு முதல்வர் கொட்டு! போற இடமெல்லாம் 6 அடின்னு பேசாதீங்க.. கருணாநிதியை களங்கப்படுத்தாதீங்க.. ஸ்டாலினுக்கு முதல்வர் கொட்டு!

அந்தமானில் மழை

அந்தமானில் மழை

தென்மேற்கு பருவ மழை, வங்கக்கடலின் அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் வழக்கம் போல் அல்லாமல் கொஞ்சம் முன்பாக துவங்கும். இந்த வார இறுதியில் மழை அங்கு ஆரம்பம் ஆகும்" இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.

மழை தேவதை

மழை தேவதை

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பை விட மிக அதிக அளவு பெய்த காரணத்தால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். இதன் மூலம் கடவுளின் தேசத்தை, மழை தேவதை மலைக்க வைத்து சென்றாள். இதனால் மழையை வரவேற்கும் கேரள மக்களே மழையை கண்டு அச்சத்தில் இருக்கின்றனர்.

ஜுன் 4ம் தேதி

ஜுன் 4ம் தேதி

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக மழை பெய்யும் என ஸ்கைமேட் என்ற தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனம் ஜுன் 4ம் தேதி தென்மேற்கு மழை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லி இருக்கிறது.

வரணும் மழையே

வரணும் மழையே

இப்போது இருக்கும் சூழலில் மழை தேவதை வராமல், தண்ணீர் இன்றி தவித்து வரும் சென்னை மக்கள், அந்தமானுக்கு எட்டி பார்க்கும் போது, அப்படியே சென்னையிலும் கொஞ்சம் வந்துட்டுபோ என்று உரிமையோடு கூப்பிடுவது மழை தேவதைக்கு கேட்காமல் இருக்காது மக்களே...

English summary
Met Department said that south west Monsoon Likely To Arrive In Kerala On June 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X