டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. குறைய போகுது வங்கி கடன் வட்டி.. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக அறிவித்தார். குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும் என்றும் அவர் கூறினார்

Recommended Video

    Shaktikanta Das press meet. | Repo rate reduced ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு..

    அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார திட்டங்களை வெளியிட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக இப்போது ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

    மார்ச் 25ம் தேதி முதல் நாட்டில் ஊடங்கு அமலில் உள்ளது. இதுவரை நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி மூன்று மாதம் கடன் இஎம்ஐகளை ஒத்திவைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது இந்நிலையில் மூன்று மாதம் மே மாதத்துடன் முடிந்துள்ளது. ஜுன் முதல் மீண்டும் இஎம்ஐ கட்ட வேண்டிய நிலையில் மக்கள் உள்ளார்கள்.

    புதிய கிளஸ்டரா? தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. கோயம்பேடு மட்டும் காரணமல்ல.. தொடரும் மர்மம்!புதிய கிளஸ்டரா? தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. கோயம்பேடு மட்டும் காரணமல்ல.. தொடரும் மர்மம்!

     பொருளாதார பேக்கேஜ்

    பொருளாதார பேக்கேஜ்

    இந்நிலையில் மக்கள் யாரும் வேலைக்கு செல்லாத நிலையில் கடன் இஎம்ஐ ஒத்திவைப்பு குறித்து ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.இந்த எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் அண்மையில் ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார சிறப்பு திட்டங்களை என்னென்ன என்பது குறித்து வெளியிட்டார்.

     ரெப்போ விகிதம் குறைப்பு

    ரெப்போ விகிதம் குறைப்பு

    இந்த சூழலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், 4.4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 4 சதவீதமாக குறைப்பதாக சக்தி காந்ததாஸ் அறிவித்தார் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     வரி வசூல் பாதிப்பு

    வரி வசூல் பாதிப்பு

    இதற்கிடையே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தொடர்ந்து பேசுகையில், கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம். கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

     தொழில்துறை வீழ்ச்சி

    தொழில்துறை வீழ்ச்சி

    உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி அடையும் சூழல் இந்த நிதியாண்டில் இல்லை இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17% ஆக குறைந்துள்ளது. உற்பத்தி நடவடிக்கை 21% குறைந்துள்ளது. மின்சாரம், பெட்ரோலிய தயாரிப்பு நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது
    தனியார் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளது. கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது" என்றார்.

    English summary
    RBI chief Shaktikanta Das to hold briefing at 10 AM, days after Nirmala Sitharaman gives details of economic relief package
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X