டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடியூரப்பா பேச்சால் மொத்த இந்தியாவுக்கும் அவமானம்.. சரமாரி டிவீட் போட்டு கிண்டலடித்த இம்ரான் கட்சி

22 பாஜக சீட் குறித்து எடியூரப்பா பேசியதை இம்ரான்கான் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சரமாரி டிவீட் போட்டு எடியூரப்பாவை கிண்டலடித்த இம்ரான் கட்சி- வீடியோ

    டெல்லி: மூத்த பாஜக தலைவர் எடியூரப்பாவின் பேச்சால் மொத்த இந்தியாவின் பெயரும் கெட்டுப்போய் விட்டது. ஒட்டு மொத்த நாட்டையும் தேர்தலுக்காக ஆதாயம் தேடும் நாடு என்று பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெரிக் இன்சாப் கட்சி வர்ணித்துள்ளது. தேர்தல் ஆதாயத்துக்காகவே பாஜக போர் நடத்தத் துடிப்பதாகவும் இம்ரான் கான் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

    கிட்டத்தட்ட பாஜகவின் உண்மையான முகத்தை எடியூரப்பா அம்பலப்படுத்தி விட்டதாகவே நாடு முழுவதும் கருத்து கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலால் மோடிக்கு செல்வாக்கு கூடியுள்ளது. அலை வீசுகிறது.

    கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று எடியூரப்பா பேசியதால் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது

    [Read more: இம்ரான் கானிடம் பாடம் கற்க வேண்டும்.. குஷ்பு அதிரடி டிவீட்.. கிளம்பியது சூடான விவாதம்]

    22 இடங்களில் வெற்றி

    22 இடங்களில் வெற்றி

    பாலகோட் தாக்குதல் குறித்து எடியூரப்பா கருத்து சொல்லும்போது, "ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு ஆதரவான சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. இந்த பாலகோட் தாக்குதலால் மோடி அலை வீசுகிறது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்று தீவிரவாதிகளை மோடி அழித்துள்ளதால், மோடி அலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் வரப்போகிற தேர்தலில் நன்றாகவே தெரியும். அதனால் கர்நாடகத்தில் 28 தொகுதிகளில் 22-ல் பாஜக வெற்றி பெறும்" என்று சொல்லி இருந்தார்.

    வைரல் ஆனது

    வைரல் ஆனது

    ஆனால் எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு உடனடி எதிர்ப்புகள், கண்டனங்கள் கிளம்பியது. ட்விட்டரில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து எடியூரப்பா, நான் அப்படியெல்லாம் பேசவே இல்லை என்று விளக்கம் தந்தாலும், அவரது பேச்சு பாகிஸ்தான் வரை வைரலாகிவிட்டது.

    சுயநல தேர்தல் ஆதாயம்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி இதை ஒரு விவகாரமாக எடுத்து கொண்டு பாஜக அரசை குற்றம் சொல்லி உள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சி போட்ட ஒரு டிவீட்டில், போர் வெறியை தூண்டி விடுகிறார்கள். போருக்கு ஆசைப்படுகிறார்கள். தேர்தலுக்காக இத்தனையும் செய்யத் துடிக்கிறார்கள். யாரும் போரை விரும்பவில்லை. வீரர்களுக்கும், மக்களுக்கும் அது நலம் பயக்காது. ஆனால் அவர்கள் விரும்புகிறார்கள். ஒருவரின் சுய நல தேர்தல் ஆதாயத்துக்கு யாரும் பழியாகி விட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மோடியை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.

    எடியூரப்பாவின் பேச்சு


    இன்னொரு டிவீட்டில், விமானப்படையின் அத்துமீறல், போர் வெறி, வீரர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலை, மக்களின் உயிருக்கு ஆபத்து. இது அனைத்துமே 22 சீட்டுகளுக்கு சமமாகி விட்டது. இந்தியாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் இப்படிப் பேசியுள்ளார். போர் என்பது தேர்தல் ஆதாயத்துக்காகவா ? என்று அதில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் #SayNoToWar என்ற ஹேஷ் டேக்கையும் இணைத்துள்ளனர். அதாவது பாகிஸ்தான் போரை விரும்பவில்லை, இந்தியாதான் தேர்தல் ஆதாயத்துக்காக போர் வெறி பிடித்து அலைவது போல அதில் கூறியுள்ளனர். காரணம், எடியூரப்பாவின் பேச்சு.

    போர் வெறி

    போர் வெறி

    மொத்தத்தில் 2 விஷயங்களை செய்யத் துடிக்கிறது இம்ரான் கான் கட்சி. இந்திய மக்களிடயே பிளவை ஏற்படுத்துவது. அதாவது, மோடிதான் போர் வெறி பிடித்து அலைகிறார். மக்களே உஷாராக இருங்கள் என்று கூறி இந்திய மக்களை மோடிக்கு எதிராக திசை திருப்பி விடுவது. 2வது உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனது தேர்தல் ஆதாயத்துக்காகவே போர் செய்யத் துடிக்கிறது என்று காட்டுவது. எது எப்படியோ, எடியூரப்பாவின் பேச்சால் பாஜகவின் பெயர் மட்டும் கெட்டுப் போகவில்லை. ஒட்டுமொத்த தேசத்தையும் அவர் தலை குனிய செய்து விட்டார் என்பதே உண்மை.

    English summary
    Imran khan's PTI Party criticized about Karnataka BJP and Yeddyurappa
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X